விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மல்லை மா நகர்க்கு இறையவன்தன்னை*  வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து*
  எல்லையில் பிள்ளை செய்வன காணாத்*  தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்* 
  கொல்லி காவலன் மால் அடி முடிமேல்*  கோலமாம் குலசேகரன் சொன்ன 
  நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள்*  நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே (2)   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மல்லைமா நகர்க்கு - செல்வம் நிரம்பிய பெரிய நகரமாகிய வடமதுரைக்கு;
இறையவன் தன்னை - தலைவனாயிருந்த கம்ஸனை;
வான் செலுத்தி - வீரஸ்வர்க்கத்திற்கு அனுப்பி;
ஈங்கு வந்து அணை - (தேவகீ ஸமீபமாகிய) இங்கே வந்து சேர்ந்த;
பிள்ளை - கண்ணாபிரானுடைய;

விளக்க உரை

ஸ்ரீ ராமாவதாரத்தில் கௌஸல்யை பெற்ற பேற்றைக்கருதி, அவள் அவ்விராம பிரானைத் தொட்ழலிலிட்டுத் தாலாட்டுக் கூறின முகத்தால் இத்திருமொழி அருளிச்செய்கிறார். இவ்வநுபவம் இவர்க்குத் திருக்கண்ணபுரத்தெம்பெருமான் விஷயத்திலே செல்லுகிறது.

English Translation

This decad of sweet Tamil songs by Kulasekaran, king of kolli who bears the Lord’s feet on his crown, sings of the lament of the godly dame Devaki on not seeing the acts of the infinite wonder-child Krishna who killed the tyrant king Kamsa. Those who master it shall quickly reach Narayana’s world.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்