விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உண்டியே உடையே*  உகந்து ஓடும்,*  இம்
  மண்டலத்தொடும்*  கூடுவது இல்லை யான்*
  அண்டவாணன்*  அரங்கன் வன் பேய்-முலை*
  உண்ட வாயன்தன்*  உன்மத்தன் காண்மினே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உண்டியே - ஆஹாரத்தையும்;
உடையே - வஸ்திரத்தையுமே;
உகந்து ஓடும் - விரும்பி (க் கண்டவிட மெங்கும்) ஓடித்திரிகிற;
இ மண்டலத்தொடும் - இந்தப் பூமண்டலத்திலுள்ள பிராகிருதர்களோடு;

விளக்க உரை

‘ஸ்ரீராமாயணம் எங்கு உபந்யஸிக்கிறார்கள்? ஸ்ரீ பாகவதம் எங்கு உபந்யஸிக்கிறார்கள்? பகவத்ஸேவை எங்கே கிடைக்கும்? பாகவதஸேவை எங்கே கிடைக்கும்? ’ என்று காதும் கண்ணும் தினவெடுத்து ஓடிக்களிக்கவேண்டியது ஸ்வரூபமாயிருக்க, அஃதொழிந்து ‘சோறு கொடுப்பது எங்கே? கூறை கிடைப்பது எங்கே?’ என்று வாய்வெருவிக் கொண்டு பறந்தோடுகின்ற இப்பாவிகளோடு எனக்குப் பொருந்தாது. விரோதிகளைப் போக்கித் தன்னை அருள்கின்ற எம்பெருமான் குணங்களையே நினைந்து நைந்து உள்ளுரைந்துருகுமவன் நான் என்கிறார்.

English Translation

I am not at ease with the worldly lot who run after gourmet food and fancy clothes. I crave for the Lord of the Universe, my Lord Aranga who sucked the ogress Putana’s breasts.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்