விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தீதில் நன்னெறி நிற்க*  அல்லாது செய்*
  நீதியாரொடும்*  கூடுவது இல்லை யான்*
  ஆதி ஆயன்*  அரங்கன் அந் தாமரைப்* 
  பேதை மா மணவாளன்*  தன் பித்தனே 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆதி - (உலகங்கட்கு) முதல்வனாய்;
ஆயன் - ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்து ஸர்வஸஞ்லபனாய்;
அம் தாமரை பேதை மா மணவாளன் - அழகிய தாமரைப் பூவில் அவதரித்த;

விளக்க உரை

தேவதாந்தரங்களைப் பற்றுகை, தீயநெறி; எம்பெருமானை ஸ்வயம் ப்ரயோஜநமாகப் பற்றுகை; நல்ல நெறி; ஐச்வரியம் முதலிய க்ஷுத்ரபுருஷார்த்தங்களை விரும்பி அவற்றுக்காக எம்பெருமானைப் பற்றுகை, தீமையோடு கலசிய நல்ல நெறி-என்று கண்டுகொள்க. அநந்ய ப்ரயோஜநமாக எம்பெருமானைப் பற்றுகையாகிற பரமசுத்த மார்க்கத்தை விட்டிட்டு, ஸ்வரூப விருத்தமாக ஒழுகுகின்றவர்களோடு எனக்குப்பொருந்த மாட்டா தென்றாராயிற்று.

English Translation

I will not be one with those who abandon the virtuous path and do wrong things. I am mad for the first-Lord Aranga, the cowherd-Lord, the bridegroom of lotus-dame-Lakshmi.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்