விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அனுங்க என்னைப் பிரிவு செய்து*  ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்* 
    குணுங்கு நாறிக் குட்டேற்றைக்*  கோவர்த்தனனைக் கண்டீரே?* 
    கணங்களோடு மின் மேகம்*  கலந்தாற் போல வனமாலை* 
    மினுங்க நின்று விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*.          

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அனுங்க - நான் வருந்தும்படியாக
என்னை பிரிவு செய்து - என்னைப் பிரியவிட்டுப்போய்
ஆயர்பாடி - திருவாய்ப்பாடியை
கவர்ந்து - ஆக்ரமித்து
உண்ணும் - அநுபவிக்கின்றவனாய்

விளக்க உரை

நான் மிகவும் தளர்ச்சியடையும்படி என்னைப் பிரிந்துபோய்த் திருவாய்ப்பாடி முழுதையுங் கொள்ளை கொண்டு திரியுமவனாய், * வெண்ணெயளைந்த குணுங்கு நாற்றம் கமழுமவனான கோபாலகிருஷ்ணனைக் கண்டதுண்டோ? என்று கேட்பார் பாசுரம் -முன்னடிகள். மின்னலும் மேகமும் சேர்ந்தாற்போலே, ஸ்யாம்மான திருமேனிக்குப் பரபாகமாய் உஜ்ஜவலமான வனமாலை அசையை அசையத் * தன்னோராயிரம் பிள்ளைகளோடு விளையாட நிற்க விருந்தாவனத்தே கண்டோமென்று விடையளிப்பார் பாசுரம் பின்னடிகள். ஆயர்பாடி கவர்ந்துண்ணும் - ஆயர்பாடி யென்றது இடவாகு பெயராய், திருவாய்ப்பாடியிலுள்ள பெண்களையும் தயிர் நெய்பால் முதலிய போக்யபதார்த்தங்களையும் குறிக்கும் குணுங்கு நாற்றமாவது - மொச்ச நாள்ளம். இடைச்சாதியர்க்கு இளயல்வான நாற்றம். குட்டேறு - இளையவ்ருஷபம் கோவர்த்தனன் - பசுக்களை ஒன்று நூறாக வளர்க்குமவன். கண்களோடு - (***) என்னும் வடசொல் - கூட்டமென்று பொருள்படும். இங்கே, தோழன்மார் கூட்டமெனக் கொள்க. * தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவானிறே கண்ணபிரான். மின் மேகம் - உம்மைத்தொகை மின்னலும் மேகமும் என்றவாறு.

English Translation

“Leaving me forlorn, a youthful butter-stench bull went raiding into Ayppadi. Did you see this Govardhana lad?” “With his Vanamala shining on his dark frame like a lightning over clouds, we saw him playing with his gang in Brindavana”.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்