விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பட்டி மேய்ந்து ஓர் காரேறு*  பலதேவற்கு ஓர் கீழ்க் கன்றாய்* 
  இட்டீறு இட்டு விளையாடி*  இங்கே போதக் கண்டீரே?* 
  இட்டமான பசுக்களை*  இனிது மறித்து நீர் ஊட்டி* 
  விட்டுக் கொண்டு விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஓர் கார் ஏறு - (கண்ணபிரா னென்கிற) கறுத்த காளையொன்று
பட்டி மேய்ந்து - காவலில்லாமல் யதேச்சமாய்த் திரிந்துகொண்டும்
பலதேவற்கு - பலராமனுக்கு
ஓர் கீழ் கன்று ஆய் - ஒப்பற்ற தம்பியாய்
இட்டீறிட்டு - ஸந்தோஷத்துக்குப்போக்குவீடாகப் பலவகையான கோலாஹலங்களைப்பண்ணி

விளக்க உரை

சிறைக்கூடத்தில் கட்டுண்டு கிடப்பாரைப்போலே பரமபதத்தில் திருவனந்தாழ்வான் மடியிலும் ஸேனை முதலியார் பிரமபின் கீழிலும் பெரியதிருவடி சிறகின் கீழிலும் ஒடுங்கி வர்த்தித்தபெருமான் இந்நிலத்தே போந்து யதேச்சமாகத் திரிந்து விளையாடா நிற்கக் கண்டதுண்டோ? என்று கேட்பவர்களின் பாசுரம் முன்னடிகள். தனக்கு மிகவும் ப்ரீதி பாத்ரமான பசுக்களைப் புல்லும் தண்ணீருமுள்ள விடங்களிலே கொண்டுபோய் மேயத்துப் பரமானந்தத்துடனே விளையாடா நிற்குங்கால் ஸ்ரீப்ருந்தாவனத்திலே காணப்பெற்றோம் என்று விடையளிப்பார் பாசுரம் பின்னடிகள். பட்டிமேய்கையாவது - தடை செய்வாரில்லாதபடி கண்டவிடஙகளிலும் சுற்றுச்சுழன்று மேய்கை. இப்படி ஸ்வச்சந்தவிஹாரம் செய்வதற்காகவேயிறே எம்பெருமான் திருநாட்டைவிட்டுத் திருவாய்ப்பாடியில் பிறந்தது. திருநாட்டிலே இவனுக்குப் பட்டிமேய வொண்ணாதே. * வானின் வரசாயிருக்க வேணுமே. அந்தச் சிறையிருப்புக் குறைதீர இங்கே வந்து பட்டிமேய்கிறபடி.

English Translation

“A black bull calf strayed away like an underling of Baladeva. Did you see him go this way?” “A cowherd lad with beautiful cows was playing and showing them how to drink. We saw such a one in Brindavana”.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்