- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பெண்கள் திறந்திலேயுள்ள வ்யாமோஹமே ஒரு வடிவுகொண்டது என்னலாம்படி. வ்யாமோஹபிண்டமாயிருப்பவனும், ஸகலகுணங்களாலும் பரிபூர்ணனும், எல்லார்க்கும் ஆசைப்படத் தகுந்தவனும், அஸம்பத்தங்களான பொய்களைக் கூசாது கூறுமவனுமான கண்ணபிரான் இங்கே எழுந்தருளக் கண்ட துண்டோ? என்று கேட்பார் பாசுரம் - முன்னடிகள். மேலே வெய்யில்படாதபடி பெரிய திருவடி தன் சிறகைவிரித்து நிழல்செய்ய, அதாகிற மேற்கட்டியின் கீழ் விருந்தாவனத்திலே எழுந்தருளக் கண்டோமென்று விடையளிப்பார் பாசுரம் - பின்னடிகள். ஏலாப் பொய்களுரைப்பானை - “ஒற்று மஞ்சளும் மாளிகைச் சாந்துமாய் வந்தால் ‘இதெல்லாம் எங்கு நின்றும் பெற்றாய்?‘ என்று கேட்டால் மற்றொன்றுண்டோ? நான் புறம்பு அறிவேனோ? என்னும்.“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் அழகை நோக்குமின். “***“ (கஸ் த்வம் பால! நுஜ கமிஹ தே மந்மந்திராசங்கயா, யுக்தம் தத் நவநீதபாண்டவிவரே ஹஸ்தம் கிமர்த்தம் ந்யதா? மாத கஞ்சந வத்ஸகம் ம்ருகயிதும், மகா விஷாதம் க்ஷணாதியேவம் வநவல்லவீநிகித க்ருஷணஸ் ஸ புஷ்ணாதுனந) என்கிற ச்லோகத்தை இங்கே பரக்க உபந்யஸித்தருள்வர் அழகிய மணவாளச்சீயர்.
English Translation
“The Lord is a lover, nay; love itself born as a bridegroom. Did you see the inept liar go this way?” “Under the wings of Garuda, like a canopy shielding him from the Sun, we saw him going in Brindavana.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்