விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மன்னு மதுரை தொடக்கமாக*  வண் துவராபதிதன் அளவும்* 
  தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டித்*  தாழ்குழலாள் துணிந்த துணிவை* 
  பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும்*  புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை* 
  இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை*  ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே*. (2)          

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உய்த்து பெய்ய வேண்டி - கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டி
துணிந்த துணிவை - கொண்ட அத்யவஸாயம் விஷயமாக,
இன் இசையால் சொன்ன - இனிய இசையுடன் அருளிச்செய்த
செம் சொல் மாலை - அழகிய சொல்மாலையாகிய இத்திருமொழியை
ஏத்தவல்லார்க்கு - ஓதவல்லவர்களுக்கு

விளக்க உரை

இத்திருமொழிகற்றார்க்குப் பலன்கூறித் தலைக்கட்டுகிறாள். வடமதுரை தொடங்கி த்வாரகாபுரியளவாகப் பத்தெட்டுஸ்தாநங்களைச் சொல்லி அவ்விடங்களிலே தன்னைக்கொண்டுபோய்ச் சேர்க்கவேணுமென்பதாகத் தனது பந்து வர்க்கத்திலுள்ளாரை நோக்கி ஆண்டாளருளிச் செய்த இத்திருமொழியை ஓதவல்லவர்கள் ஸ்ரீவைகுண்டத்திலேபோய் நித்யாநுபவம் பண்ணப்பெறுபவர்கள் என்ற தாயிற்று.

English Translation

This garland of sweet verses by Goda, daughter of Puduvai’s king Vishnuchitta, imploring her friends to take her to the Lord in Mathura, Dvaraka and elsewhere, --those who can sing it will dwell in Vaikunta forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்