விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூட்டில் இருந்து கிளி எப்போதும்*  கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கும்* 
    ஊட்டக் கொடாது செறுப்பனாகில்*  உலகுஅளந்தான்! என்று உயரக் கூவும்* 
    நாட்டில் தலைப்பழி எய்தி*  உங்கள் நன்மை இழந்து தலையிடாதே* 
    சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்*  துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்*.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கூட்டில் இருந்து - கூட்டில் இருந்துகொண்டு
எப்போதும் - ஸதாகாலமும்
கோவிந்தாகோவிந்தா என்று அழைக்கும் - கோவிந்தா கோவிந்தா வென்று கூவாநின்றது,
ஊட்டு கொடாது - உணவுகெடாமல் (பட்டினிகிடக்கும்படி)
செறுப்பன் ஆகில் - துன்பப்படுத்தினேனாகில்

விளக்க உரை

இவள் விரஹத்தாலே நோவுபட்டிருக்கிற இச்சமயத்தில் இவன் வளர்க்குங் கிளிப்பிள்ளையொன்று இவள் முன்பு கற்பித்துவைத்த திருநாமத்தைச் சொல்லிகொண்டு இங்குமங்கும் திரியத்தொடங்கிற்று, ‘இதை நாம்யதேச்சமாய்த் திரியும்படியாக விடவேயன்றோ இது கண்ணன் நாம்மேகுழறிக் கொல்லுகின்றது, இதைப்பிடித்து அடைத்திடுவோம்‘ என்று பார்த்துக்கூட்டிலே யடைத்தாள், அது அங்கேயிருந்து “கோவிந்தா! கோவிந்தா!“ என்று கூவத்தொடங்கிற்று, அதைக்கேட்ட ஆண்டாள் ‘இது சோற்றுச்செருக்காலேயன்றோ இப்படி சொல்லுகிறது, சோற்றைக் குறைத்தோமாகில் தன்னடையே தவிருகிறது‘ என்று நினைத்துப் பட்டினியாகவிட்டுவைத்தாள், ‘ஊணடங்க வீணடங்கும்‘ என்று இவளுடைய நினைவுபோலும். ஆனால் அந்தப்பட்டினியானது. இவளுக்கு விபரீதபலப்ரதமாயிற்று, அரையர்கள் மிடற்றுக்கு எண்ணெயிட்டுப் பட்டினி கிடந்து மிடற்றில் கனத்தை ஆற்றிப்பாடுவதுபோல இக்கிளியும் பட்டினிவிட்டதே காரணமாக உயரப்பாடத்தொடங்கிற்று, உலகளந்தான்!“ என்று அதுகூவும் போதை த்வநியைக்கேட்டால் அவன் அன்றிவ்வுலகமளக்கத் திருவடிகளைப் பரப்பினவிடமெங்கும் இதுவும் தன்மிடேற்றோசையைப் பரவவிடா நின்றதுபோலும், அந்தக்கூவுதலைக் கேட்டவாறே நாமே பதறிஓடியாகிலும் அவனைச்சென்று கிட்டுவோமென்கிறகாதல் கிளர்கின்றது. அப்படி நான் பதறி ஓடுவது நமது குடிக்குப் பெருத்தபழியாய் முடியும், தடிதடியாகத் தாய்மார்களிருந்தும் ஒரு பெண்பிள்ளைக்கு நன்மைசெய்யாமல் தெருவிலேபுறப்படப் பார்த்திருந்தார்களே!‘ என்று நாளைக்கே நாடெங்கும் பழிபரவும், அப்போது நீங்கள் தலைகவிழ்ந்து தலையைக்கீறி நிற்கத்தான் நேரிடும், அப்படிப்பட்ட பரிபவத்துக்கு நீங்கள் ஆளாகாமல் இப்போதே என்னைநீங்களாகவே த்வாரகையிலே கொண்டுசேர்த்து விடுங்களென்கிறாள்.

English Translation

This caged parrot was starved and punished for calling ‘Govinda’ incessantly; she now screams, “Lord-who-measured-the-Earth”, louder. Do not earn the worlds abuse, and hang your heads in shame. Take me now to Dvaraka, the city surrounded by high-walled mansions

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்