விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கண்ணன் என்னும் கருந்தெய்வம்*  காட்சிப் பழகிக் கிடப்பேனைப்* 
  புண்ணிற் புளிப் பெய்தாற் போலப்*  புறம் நின்று அழகு பேசாதே* 
  பெண்ணின் வருத்தம் அறியாத*  பெருமான் அரையிற் பீதக- 
  வண்ண ஆடை கொண்டு*  என்னை வாட்டம் தணிய வீசீரே* (2)     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கண்ணன் என்னும் - ஸ்ரீக்ருஷ்ணனென்கிற
கரு தெய்வம் - கரியதொரு பரதேவதையினுடைய
காட்சி - காட்சியிலே
பழகி கிடப்பேனே - பழகிக்கிடக்கிற என்னைக் குறித்து (ஓ! தாய்மார்களே! நீங்கள்)
புறம்நின்று - அசலாக இருந்துகொண்டு

விளக்க உரை

தோழியர்களே. கண்ணனெனும் கருந்தெய்வத்தின் அழகையும் அவனுடன் கூடி மகிழும் காட்சியையும் எப்போதும் கண்டு கிடக்கின்றேன். புண்ணிலே புளியைப் பூசுவதைப் போல் அயலில் நின்று என்னைக் கேலி செய்யாமல் என் வருத்தத்தை அறியாமல் விலகி நிற்கின்ற அந்த பெருமான் தன் இடையில் கட்டியிருக்கும் மஞ்சள் பட்டுடையை கொண்டு வந்து என் வாட்டம் தீருமாறு வீச மாட்டீர்களா?'

English Translation

I lie possessed by a dark god called Krishna. Pray do not stand and talk wisdom, pouring tamarind over a wound. Alas, the Lord does not understand the maiden’s pangs. Unrobed him of his yellow vestment and fan me out of my swoon with it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்