விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கோவை மணாட்டி!*  நீ உன் கொழுங்கனி கொண்டு*  எம்மை 
  ஆவி தொலைவியேல்*  வாயழகர்தம்மை அஞ்சுதும்* 
  பாவியேன் தோன்றிப்*  பாம்பு அணையார்க்கும் தம் பாம்புபோல்* 
  நாவும் இரண்டு உள ஆய்த்து*  நாணிலியேனுக்கே*        

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கோவை மானாட்டி - அம்மா! கோவைக் கொடியே!
உன் - உன்னுடைய
கொழுங்கனி கொண்டு - அழகியயழங்களாலே
எம்மை - என்னுடைய
ஆவி - உயிரை

விளக்க உரை

மேற்புறங்களில் நின்றும் கண்ணைமீட்டுப் பக்கங்களில் நோக்கினாள் அங்கே ஒரு செடியிலே கோவைக்கொடி படர்ந்து பழுத்துக்கிடந்தன; அவற்றை நோக்கிப் பேசுகின்றாள். கோவைக்கனிகள் எம்பெருமானுடைய திருவதரத்திற்கு ஸ்மாரகங்களாய் இருப்பவையாதலால் அவ்வழியாலே அவை தன்னை நலியவே அந்த நலிவுபொறுக்கமாட்டாமற் சொல்லுகிறாளென்க. கீழ்பாட்டுக்களில் “கார்க்கோடல்பூக்காள்!“ என்றும் “மேல்தோன்றிப்பூக்காள்!“ என்றும் சொன்னதுபோல் இப்பாட்டிலும் ‘கோவைக்கொடிகாள்!‘ என்றாவது, ‘கோவைக்கனிகாள்!‘ என்றாவது சொல்லாமல் கோவைமணாட்டி! என்றதென்னென்னில்; ‘கொடியாகையாலே ஸாபத்ந்யத்தாலே நலிந்தாப்போலேயிராநின்றது“ என்றருளிச்செய்வர் பெரியவாச்சான்பிள்ளை, வடமொழியில் கொடிக்கு வாசகமாகிய லதா, வல்லீ முதலிய ஸப்தங்கள் ஸ்திரீலிங்கமாதல் அறிக. ஸத்ரீகளைக் கொடிகளாகவே கூறுதலும் வழக்கம். இனி மாணாட்டி என்று மணமுனைடமை சொல்லிற்றாகவுமாம். அதாவது பரிமளத்தை உடைத்தாகை.

English Translation

Madam Kovai creeper! Pray do not torment me. I shudder to see your berries, as beautiful as the lips of the Lord. The shameless sinner that I am! By me, the Lord has become two tongued, like his serpent-companion.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்