விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மேல் தோன்றிப் பூக்காள்!*  மேல் உலகங்களின் மீது போய்* 
  மேல் தோன்றும் சோதி*  வேத முதல்வர் வலங்கையில்* 
  மேல் தோன்றும் ஆழியின்*  வெஞ்சுடர் போலச் சுடாது*  
  எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து*  வைத்துக்கொள்கிற்றிரே*.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மேல் தோன்றி பூக்காள் - உயரப் பூத்திருக்கிற காந்தள் பூக்களே!
மேல் உலகங்களின் மீது போய் மேல் தோன்றும் சோதி - மேலுள்ள உலகங்களெல்லாவற்றையுங் கடந்து அவற்றுக்கு மேற்பட்டு விளங்குகின்ற ‘தன்னுடைச்சோதி‘ என்கிற பரமபதத்தில் எழுந்தருளி இருக்கிற
வேதம் முதல்வர் - வேதப்ரதிபாத்யனான பரம புருஷனுடைய
வலம்கையின் மேல் தோன்றும் - வலத்திருக்கையிலே விளங்காநின்ற
ஆழியின் வெம் சுடர் போல் - திருவாழியாழ்வானுடைய வெவ்வியதேஜஸ்ஸு போல

விளக்க உரை

கீழ், கோடல்பூக்கள் பண்ணின ஹிம்ஸையைப் பொறுக்கமாட்டாமல் அவற்றில்நின்றும் கண்ணைமீட்டு மேலொருபக்கத்திலே வைத்தாள், அங்கே மேல் தோன்றிப்பூக்கள் மலர்நதுதோன்றின. அவை எம்பெருமானுடைய சிரிப்பைக் கோட்சொல்லிக்கொண்டு நலியவே, அவற்றைநோக்கிக் கூறுகின்றாள். தோன்றிப்பூ என்றாலும், காந்தட்பூ என்றாலும், கோடல்பூ என்றாலும் புஷ்பஜாதி ஒன்றேயாம், மேல்தோன்றிப்பூ என்றமையால் கீழ்ப்பாட்டிற்சொன்ன கோடல்பூக்கள் கீழேபடர் கின்றனவையென்றும், இவை மேலே படர்கின்றவையென்றும் அவாந்தரபேதம் அறியத்தக்கது, நிலஸம்பங்கி, கொடிஸம்பங்கி என்கிறாப்போலே. “த்ருஷ்டி விஷம்போலே கோடல்பூக்கள் பாதகமாகப் புக்கவாறே அவற்றுக்கு இறாய்த்துக் கண்ணை மேலேவைத்தாள், அங்கே மேல்தோன்றிப்பூக்களாய் கிடந்தது, அவற்றைநோக்கி ‘மேல்தோன்றிப்பூக்கள்! என்கிறாள், அதுக்குத்தப்பினாரையும் அழிக்கக்கடவோமென்று அதுக்கு ஒருபேரும் பெற்று நீங்கள் மேலே புக்குநிற்பதே!“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகாண்க. மேலுலகங்களின்மீது போய் மேல்தோன்றஞ்சோதி என்றது - பரமபதமாகிற சோதிமிக்க இடத்தையாம். அவ்விடத்திலே எழுந்தருளியிருக்கின்ற வேத வேத்யனான பரமபுருஷனுடைய வலத்திருக்கையின்மேல் விளங்குகின்ற திருவாழியாழ்வானுடைய வெவ்வியசுடர் ஆச்ரிதஸத்ருக்களை தஹிப்பதுபோல என்னை நீங்கள் தஹிக்கவேண்டாவென்று வேண்டிக்கொள்ளுகிறாள். இதனால் மேல்தோன்றிப்பூக்களின் தாபம் அஸஹயமாயிருத்தல் சொல்லிற்றாயிற்று.

English Translation

O Kantal flowers blossoming on the high hedge! Rather than take me high above to the realm of the self-illumined Vedic Lord, and scorch me with the intense rays of his radiant discus, will you not leave me in the company of the head?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்