விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முல்லைப் பிராட்டி!*  நீ உன் முறுவல்கள் கொண்டு*  எம்மை-
  அல்லல் விளைவியேல்*  ஆழி நங்காய்! உன் அடைக்கலம்* 
  கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட*  குமரனார்- 
  சொல்லும் பொய்யானால்*  நானும் பிறந்தமை பொய் அன்றே*.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முல்லைப் பிராட்டி! - அம்மா! முல்லைக் கொடியே!
ஆழி நங்காய்! - கம்பீரமான இயல்வையுடையாய்!
உன் முறுவல்கள் கொண்டு - (எம்பெருமானது முறுவல்போன்ற) உனது விகாஸத்தாலே
எம்மை - என்விஷயத்திலே
அல்லல் விளைவியேல் - வருத்தத்தை உண்டாக்க வேண்டா,
உன் அடைக்கலம் - (இதற்காக) உன்னைச் சரணமடைகிறேன்.

விளக்க உரை

கோவைக்கொடியில் நின்றும் கண்ணைத்திருப்பி வேறோரிடத்தே வைத்தாள், அங்கே முல்லையானது நன்றாகப் பூத்துக்கிடந்தது, அதைக்கட்டவாறே எம்பெருமானுடைய முறுவல் நினைவுக்கு வரவே ஆற்றமாட்டாதாளாய் அதின்காலிலே விழுகிறாள். வழிபறிக்கவந்த கள்ளனைக் கண்டால் ‘பிரானே! நாயனே! அப்பனே! என்னுமாபோலே முல்லைப்பிராட்டி என்கிறாள் அம்மா முல்லைக்கொடியே கோடல்பூக்களுக்கும் மேல்தோன்றிப் பூக்களுக்கும் கோவைக்கொடிக்கும் ஒரு வாறு தப்பிப் பிழைத்தோமென்று நான் மகிழ்ந்திருக்கையில், நீ உன்விகாஸத்தைக்காட்டி என்னை துன்பப்படுத்துவது தகுதியோ? இனி இப்படி என்னைத் துன்பப்படுத்தாதே, உன்காலிலேவிழுந்து உன்னை வேண்டிக்கொள்ளுகிறேன், என்னை ஹமஸிக்கவேண்டாமம்மா! என்கிறாள்.

English Translation

Madam Mullai creeper! Pray do not torture me, with your white smiles; I fall at your feet, my Lady! My Lord is the prince who maimed the defiant demoness. If his promises be false, I too was never born.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்