- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உரை:1
காளியநாகத்தின் கொழுப்பையடக்கின அபதாநத்திலே ஈடுபட்டுப் பேசுகிறாள். ஒரு நாள் க்ருஷ்ணன் கன்றுகளை ஒட்டிக்கொண்டு ஒருவரும் ஸஞ்சாரியாக வழியே போகத்தொடங்க, மற்ற இடைப்பிள்ளைகள் அழைத்து ‘க்ருஷ்ணா! அவ்வழி நோக்கவேண்டா’ அவ்வழியிற் சென்றால் யமுநாநதியில் ஒர்மடுவில் இருந்து கொண்டு அம்மடுமுழுவதையும் தன்விஷாக்நியினாற் கொதிப்படைந்த நீருள்ள காய்ப் பாநத்துக்கு அநர்ஹமாம்படி செய்த காளிய னென்னும் கொடிய ஐந்தலைநாகம் குடும்பத்தோடு வாஸஞ்செய்து கொண்டு அணுகினவர்களனைவரையும் பிணமாக்கிவிடுவதால் நாங்கள் அஞ்சுகின்றோம்’ என்ன’ அதைக்கேட்ட கண்ணபிரான் உடனே அக்காளிநாகத்தைத் தண்டிக்கவேண்டுமென்ற திருவுள்ளங் கொண்டு அம்மடுவிற்குச் சமீபத்திலுள்ளதொரு கடம்பமரத்தின் மேலேறி அம்மடுவிற் குதித்து, அந்நாகத்தின் படங்களின் மேல் ஏறித் துவைத்து நாக்கநஞ் செய்து நசுக்கி வலியடக்குகையில், மாங்கலியபிக்ஷையிட்டருள வேண்டுமென்று தன்னை வணங்கிப் பிரார்த்தித்த நாககன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி அந்தக் காளியனை உயிரோடு கடலிற்சென்று வாழும்படி விட்டருளினன் என்ற வரலாறு இங்கு அறியத்தக்கது.
உரை:2
ஆய்ச்சியர்களும் ஆயர்களும் அஞ்சும்படி, பூக்கள் நிரம்பிய கடம்ப மரம் ஏறி, நீர்நிலையில் பாய்ந்து, அங்கு வாழ்ந்த காளியன் தலை மேல் நடமாடிய கூத்தனார் வருவானென்றால் நீ கூடிடு கூடலே
English Translation
Men and women of the cowherd clan watched in awe, when Krishna climbed the tall Kadamba tree, and then leapt on the serpent Kaliya’s hood. If the dancer Lord will come, then join, O Lord-of-the-circle.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்