- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உரை:1
நான்முகனும் நித்யஸூரிகளும் போற்றும்படியாக அங்கே எழுந்தருளியிருந்து, பின்பு தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி மண்ணின் பாரம் நீக்குவதற்கே வடமதுரையிலே வந்து தேவகிக்கும் வஸுதேவர்க்கும் புதல்வனாய்த் திருவவதரித்தருளின எம்பெருமான் இன்று என் துயர்தீர இங்கே எழுந்தருளக் கூடுமா என்று மநோரத்திக்கிறாள். “பூமகன் வானவர் (இவர்களெல்லாரும்) புகழ்போற்றுதற்கு ஆம் மகன்” என இயைத்து உரைக்கப்பட்டது. அன்றியே, புகழ் என்பதை வானவர்க்கு விசேஷணமாக்கி, ‘(தத் விப்ராஸோ விபந்பவோ ஜாக்ருவாம்ஸஸ் ஸமிந்ததே’) என்றும், (‘யத்ரர்ஷய: ப்ரதமஜா யே புராணா:’) என்று மித்யாதி ச்ருதிவாக்யங்களாலே புகழப்பட்ட வானவர்கள் - என்று பொருள் கொள்ளுமாம்: பூமகன் என்றது உபலக்ஷணமாகி இந்தவிபூதியைச் சொல்லிற்றாய், வானவர் என்றது அந்த விபூதியைச் சொல்லிற்றாய்க் கொண்டு, ஓர் ஆற்றின் நடுவே போகிற வோடத்தை இருகரையிலுள்ளாரும் அழைக்குமா போலே இரண்டு விபூதியி லுள்ளாராலும் போற்றப் பட்டவன் என்க. (‘நாவேவ யாந்தமுபயே ஹவந்தே’) என்ற வேதவாக்கியம் இங்கே ஸ்மரிக்கத்தகும். “போற்றதற்கா மவன்” என்று ப்ராசீநபாடமென்பர். ஆமவன்-தகுதியானவன் என்கை. இவ்விடத்தில் வியாக்கி பானத்தால் பாட் நிர்த்தாரணம அசக்யம்’ அரும்பதவுரைகாரர் மாத்திரம் “ஆம்மகன்” என்று கொண்டு விவரிக்கிறார் ஆயினும் “ஆமவன்” என்ற பாடமே சிறக்குமென்று அஸ்மதாசார்யர் அருளிச் செய்யும்படி. இப்பாடத்தில் எதுகைநயமும் குன்றாது
உரை:2
பூவில் வாழ்பவன், புகழ்ந்து வானவர் போற்றுதற்கு உரிய அழகில் சிறந்தவன், அழகிய ஒளி மிகுந்த நெற்றியைக் கொண்ட தேவகிதேவியின் சிறந்த மகன், செல்வம் மிகுந்த வசுதேவரின் இளவரசன் வருவானென்றால் நீ கூடிடு கூடலே.
English Translation
The Lord praised by Brahma and the celestials, is the illustrations son of beautiful Mother Devaki, and the darling prince of the noble father Vasudeva. If he will come, then join, O Lord-of-the-Circle.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்