விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நாமம் ஆயிரம் ஏத்த நின்ற*  நாராயணா நரனே*  உன்னை- 
  மாமி தன் மகன் ஆகப் பெற்றால்*  எமக்கு வாதை தவிருமே* 
  காமன் போதரு காலம் என்று*  பங்குனி நாள் கடை பாரித்தோம்* 
  தீமை செய்யும் சிரீதரா!*  எங்கள் சிற்றில் வந்து சிதையேலே* (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நாமம் ஆயிரம் - ஸஹஸ்ரநாமத்தினால்
ஏத்த நின்ற - (நித்யஸூரிகள்) துதிக்கும்படி நின்ற
நாராயணா - நாராயணனே!
நரனே - (சக்கரவர்த்தித்   திருமகனாய்ப் பிறந்து) மானிடவுடல் கொண்ட (வனே!
உன்னை - (ஏற்கனவே தீம்பனான) உன்னை

விளக்க உரை

“நாராயணாநரனே!” என்றது - வதரியாச்சிரமத்தில் நரநாராயண ரூபேண அவதரித்தவாற்றைக் கூறியவாறுமாம். மாமிதன் மகன் ஸ்ரீ கணவன்’ மாமியாருடைய பிற்றை தனக்குக் கணவனிறே. வடமொழியில், கணவனை “ஆர்யபுத்ர:” என்ற சொல்லால் வழங்குமாறறிக’ ஆர்யனென்று மாமனாரைச் சொல்லிற்றாய், அவருடைய மகனென்று கணவனைச் சொல்லுகிறது. வாதை - ‘ஸாயா’ என்ற வடசொல் விகாரம். உலகில் எல்லார்க்குந் தீம்பு செய்கின்ற புருடன் தனது மனைவிடத்து வந்தால் பொறுக்கவொண்ணாத தீம்பு செய்வனென்பது ப்ரஸித்தமாதலால், அதனை உணர்ந்த இவர்கள், ‘ஏற்கனவே தீம்பனான நீ எமக்குக் கணவனாகவும் வாய்த்தால் எங்களால் துன்பம் அநுபவித்து முடியுமோ’ என்கிறார்கள். இதுகேட்ட கண்ணபிரான், ‘பெண்காள்! நானோ தீம்பு செய்பவன்? உங்களை நான் நெஞ்சிலும் நினையாதிருக்க, என்வரவை எதிர்பார்த்துச் சிற்றிழைக்கிறீர்கள் நீங்களன்றோ?’ என்ன’ அதுகேட்ட ஆய்ச்சிகள், ‘அப்பனே! நீ அங்ஙனம் நினைக்கவேண்டா, நாங்கள் உனக்காகச் சிற்றிலிழைக்கின்றோமல்லோம்’ நிகழ்வது பங்குனிமாத மாதலால் காமதேவன் வீதிவலம் வரக்கூடுமென்று அவன் வரும் வீதியிற் சிற்றிலிழைத்து அலங்கரிக்கிறோம் இத்தனையொழிய உன்னைக் குறித்து ஒன்றுஞ் செய்கின்றிலோம்’ என்ன’ அது கேட்ட கண்ணபிரான் ‘நீங்கள் சிற்றிலிழைப்பது அந்யார்த்தமாகில், அதனை நான் அழிப்பதும் அந்யார்த்தந்தான்’ என்று சொல்லிச் சிற்றிலை அழிக்கப்புக, ஆய்ச்சிகள் ‘அழிக்கவேண்டா’ என்று விலக்குகின்றனர். சிரிதரன் - ஸ்ரீயா:. சிறு+இல், சிற்றில். (க)

English Translation

O Fierce lion of the deep, O Savoir of the elephant, Krishna! Do not hurt us innocent girls with your sidelong glances. We have labored hard in the sand with our bangle hands. O Lord who loves to sleep in the ocean, do not come and break out sand castles.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்