விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இன்று முற்றும் முதுகு நோவ*  இருந்திழைத்த இச்சிற்றிலை* 
    நன்றும் கண்ணுற நோக்கி*  நாங்கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய்* 
    அன்று பாலகனாகி*  ஆலிலை மேல் துயின்ற எம்மாதியாய்!* 
    என்றும் உந்தனுக்கு எங்கள் மேல்*  இரக்கம் எழாதது எம் பாவமே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இன்று முற்றும் - இன்றையதினம் முழுவதும்
முதுகு நோவ - முதுகு நோம்படி
இருந்து - உட்கார்ந்து கொண்டு
இழைத்த - ஸ்ருஷ்டித்த
இ சிற்றிலை - இந்தச் சிற்றிலை

விளக்க உரை

கண்ணபிரானே! நீ ஸர்வசக்தியுக்தனாதலால் எப்படிப்பட்ட அரிய காரியங்களையும் ஒரு ஸங்கல்பமாத்திரத்தினால் வருத்தமறப் படைக்கவல்லை’ நாங்கள் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்திற் பிறந்த அபலைகளாகையாலே இச்சிற்றிலை இழைக்கப்பட்ட பாடு பன்னியுரைக்குங்காற் பாரதமாம்’ இப்படி வருத்தப்பட்டுச் செய்த இச்சிற்றிலை நீ நன்றாகக் கண்ணை ஊன்றவைத்துக் கண்டாயாகில் எங்களுடைய ஆசை ஒருவாறு தணியும் என்று ஆய்ச்சிகள் சொல்லச் செய்தேயும், கண்ணபிரான் அதனைக் கேளாமல் சிற்றிலை அழிப்பதாக முயல, அது கண்ட ஆய்ச்சிகள், ‘நாயகனே! பண்டு இப்பாரெல்லாம் நெடுங்கடலேயான காலத்தில் உலகத்தை யெல்லாம் வயிற்றிலே வைத்து நோக்கிப் பாலகனாய் ஆலிலையில் பள்ளிகொண்ட பரமகாருணிகனான நீ மிகவும் எளியரான எங்கள் திறத்தில் ஒருநாளும் அருள்புரியாதொழிவது நாங்கள் பண்ணின பாபத்தின் பலனே காணென்று உள் வெதும்புகின்றனர். “இன்றுமுற்று முதுகு நோவ என்பதற்குக் கருத்து எங்கள் முதுகைநோவு தீரச்சற்றுப் பிடிக்கலாகாதோ? என்பதாம். (நாம் கோளும் ஆர்வந்தன்னைத் தணி) விஷயம் ஸித்தித்தால் ஆசை நிவர்த்திக்கும் ஆதாலால், ‘நாம் இழைக்குஞ் சிற்றிலைக் கண்ணபிரான் கடாக்ஷிக்க வேணும்’ என்று ஆசைப்பட்டு இவர்களிழைக்குஞ் சிற்றலில் அவனுடைய கடாக்ஷம் விழுந்தால் இவர்களுடைய ஆசை தீருமென்க. கொளும் - ‘கொள்ளும்’ என்பதன் விகாரம். “நாங்கள் மார்வந்தன்னை” என்ற பாடமும் வியாக்கியானத்திற்கு ஒக்கும். அப்பாடத்தில், நாங்களும் என்பது, நோக்கி என்ற வினையெச்சத்தில் இயையும். அதன் கருத்து; நாங்கள் இச்சிற்றிலை இழைக்கும்போது இதனைத் தனித்தனி அவயவமாகக் கண்டோமத்தனை யொழிய: ஒரு அவயவியாகக் காணப் பெற்றிலோம்’ ஆதலால் எங்களுடைய ஆசை தீரவில்லை’ அப்படியிருக்க இதனை நீ அழித்தாயாகில் எங்களுக்குப் பெருத்த குறையாம்’ இது ஒரு அவயவியான பின்னர் இத்தை நாங்கள் நன்றாகக் கண்டு மகிழ்ந்து ஆசை தீரும்படி. நீ செய்ய வேணுமென்பதாம். இப்பாடத்திற் காட்டிலும் ‘:நாங் கொளும்” என்ற பாடமே பலவகைகளினுஞ் சிறக்குமென்பது கற்றுணர்ந்த பெரியோர்களின் கொள்கை. கிடாய்-முன்னிலை அசைச்சொல். பாலகன். அன்றி, வானாகனென்றாய், அனைவரையுங் காத்தருள்பவன் என்று முரைக்கலாம். எம்பாவமே -“***“ என்று பரதாழ்வான் கதறினாப்போலே கதறுகிறார்கள்.

English Translation

O Lord of rain cloud hue, is your face a magic potion? Your words and signs make us dizzy with love. We do not speak harshly lets you think us ill-bred. O Lord of Lotus red eyes, do not break our sand castles

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்