விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளைக்*  கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற* 
  மருப்பினை ஒசித்துப் புள் வாய்பிளந்த*  மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று* 
  பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும்*  புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை* 
  விருப்பு உடை இன்தமிழ் மாலை வல்லார்*  விண்ணவர் கோன் அடி நண்ணுவரே* (2) 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாடம் - மாடங்கள்
பொலிந்து தோன்றும் - மிகவும் விளங்காநிற்கப் பெற்ற
புதுவையர் - ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளவர்கட்கு
கோன் - ஸ்வாமியான
விட்டுசித்தன் - பொரியாழ்வாருடைய (மகளாகிற-)

விளக்க உரை

உரை:1

இத்திருமொழி கற்றார் பெறும் பேறு கூறுமிப்பாசுரம் திருநாமப்பாட்டென்றும் பலச்ருதியென்றும் வழங்கப்பெறும். கரியலற மருப்பினை யோசித்த வரலாறு :- வில்விழா என்கிற வியாஜம் வைத்துக் கம்ஸனால் வரவழைக்கப்பட்டு ஸ்ரீகிருஷ்ண பலராமர்கள் கம்ஸனரண்மனையை நோக்கிச் செல்லுமளவில், அவ்வரண்மனை வாசல்வழியில் தம்மைக் கொல்லும் பொருட்டு அவனால் ஏவி நிறுத்தப்பட்ட குவலயா பீடமென்னும் மத யானை சீறிவர அவ்யாதவவீரர்; அதனை எதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை எடுப்பது போல எளிதிற் பறித்து அவற்றையே ஆயுதமாகக் கொண்டு அடித்து அவ்வானையை உயிர் தொலைத்து விட்டு உள்ளே போயினரென்பதாம். புள்வாய் பிளந்த வரலாற்றை, கீழ் இரண்டாம் பாட்டினுரையிற் காண்க. விட்டுசித்தன் ஸ்ரீ “வேயர் தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன் மனத்தே,- கோயில் கொண்ட கோவலன்” என்றபடி பெரியாழ்வார் எம்பெருமானுக்குத் தம் திருவுள்ளத்தையே கோயிலாக அமைத்தருளினமையால் விஷ்ணுசித்தரெனக் காரணப் பெயர் பெற்றனரென்க. “விருப்புடன்” என்ற பாடத்தில், ‘விருப்புடன் வல்லார்’ என இயையும். வியாக்கியானம் :- “(விண்ணவர் இத்யாதி.) ஸாத்விகாக்ரேஸரரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்துவைத்து பகவல் லாபத்துக்காக மடலெடுப்பாரோ பாதி காமன் காலிலே விழவேண்டும்படியான இவளைப் போலன்றிக்கே இப்ரபந்தங் கற்றவர்கள் ஸம்ஸாரத்தை விட்டு, நித்யாநுபவம் பண்ணுகிற நித்யஸூரிகளோடே ஒரு கோவையாய் அநுபவிக்கப் பெறுவர்கள்.” .

உரை:2

கரும்பு வில்லும் மலர்க்கணைகளும் கொண்ட காமதேவன் அவன் திருவடி பணிந்து அங்கே ஓர் யானை அலற அதன் தந்தம் ஒடித்து பகாசுரன் என்ற கொக்கு அரக்கன் வாய் பிளந்த மணிவண்ணனுக்கு என்றே என்னை உரியவள் ஆக்கி விடு என்று மலை போன்ற மாடங்கள் அழகாகத் தோன்றும் வில்லி புத்தூர் விஷ்ணு சித்தன்  கோதை விருப்பமுடன் பாடிய இந்தத் தமிழ் பாமாலையை பாடல் வல்லார் விண்ணகத்தில் இருக்கும் அந்த பரமனடி நலம் பெறுவரே.

English Translation

O Lord in mortal form deserving a thousand names! Were you to become our master’s son-in-law, would that relieve our pains? We were waiting for the god of love, for this is spring time. Naughty Sire! Do not come and break our sand castles.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்