விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய*  கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண- 
    வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்*  ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை- 
    மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்*  தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்* 
    வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா!*  நீ- நேய நிலைக் கதவம் நீக்கு-ஏலோர் எம்பாவாய்.   (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாயகன் ஆய் கின்ற - (எமக்கு) ஸ்வாமியாயிருக்கிற
நந்தகோபனுடைய - நந்தகோபருடைய
கோயில் - திருமாளிகையை
காப்பானே - காக்குமவனே!
கொடி - த்வஜபடங்கள்

விளக்க உரை

உரை:1

கீழ்ப் பத்துப்பாட்டுகளினால் பத்துப் பெண்களை உணர்த்தினபடியைக் கூறியது – திருவாய்ப்பாடியிலுள்ள பஞ்சலங் குடிற்பெண்களையு முணர்த்தியவாற்றிற்கு உபலக்ஷணம். முந்துறமுன்னமுணர்ந்த பெண்கள் உறங்குகின்ற மற்றைப்பெண்களையுடையுமுணர்த்தித் தம்முடன் கூட்டிக்கொண்டு எல்லோரும் பெருங்கூட்டமாகத் திரண்டு ஸ்ரீ நந்தகோபர் திருமாளிகை வாசலிற் சென்று சேர்ந்து, திருக்கோயில் காப்பானையும் திருவாசல் காப்பானையும் நோக்கித் ‘திருவாசல் திருக்காப்பு நீக்கவேணும்’ என்று இரக்கும்படியைக் கூறும் பாசுரம் இது. இப்பாட்டில் முதலடி-கோயில் காப்பானையும், இரண்டாமடி – வாசல் காப்பானையும் உணர்த்துகின்றது. கோபுர வாசல் போன்ற வெளிப்புறத்து வாசலைக் காப்பவன்-கோயில் காப்பானென்றும், த்வஜஸ்தம்பத்தி னருகிலுள்ள வாசல் போன்ற உட்புறத்து வாசலைக் காப்பவன் - வாசல்காப்பானென்றும் இங்குக் கூறப்படுகின்றன வெனக்கொள்க. “நாயகனாய்நின்ற” என்ற அடைமொழி – நந்தகோபனுக்கு இட்டதாகவுமாம்’ கோயில் காப்பானுக்கு இட்டதாகவுமாம். இவ்வாயர்மாதர் கடகரையே சேஷியாகக் கருதும் அதிகாரிகளாகையால் அவர்களை நாயகரென்கிறார்கள். ஒருவன் ஒருரத்நத்தைத் தந்தால அதன் விலையின் மேன்மையை அறியவறிய, அதனைக் கொடுத்தவன் பக்கலில் அளவற்ற ஆதரம் பிறக்குமாறு போல, கடகர் முகமாக எம்பெருமானைப் பக்கலில் பெருநன்றி பாராட்டுவர். ஆனது பற்றியே ஆளவந்தார்எம்பெருமானை ஸ்தோத்ர ரத்நத்தினால் துதிக்க இழிந்து, முந்துற முன்னம் நாதமுனிகள் முதலிய ஆசாரியர்களைத் துதித்தருளினர்.

உரை:2

எங்கள் குலத்திற்குத் தலைவனான நந்தகோபனுடைய அரண்மனையைக் காப்பவனே! அவனது கொடியும் தோரணங்களும் தோன்றும் வாயிலைக் காப்பவனே! மாணிக்கக் கதவைத் தாள் திறப்பாய்!
ஆயர் சிறுமியர்களாகிய எங்களுக்கு வேண்டியதெல்லாம் தருவதாக மாயன் பச்சை மணி போல் நிறம் கொண்டவன் நேற்றே வாக்குறுதி தந்திருக்கிறான்! அதனால் அவனைத் துயில் எழுப்பிப் பாட தூயவர்களாக வந்திருக்கிறோம்! அம்மம்மா! பேசிப் பேசி நேரத்தைக் கடத்தாமல் நீர் அன்பின் வெளிப்பாடான நிலைக்கதவைத் திறப்பாய்!

English Translation

O Gate-keeper, open the DOORS decked with bells, gateway to the mansions of our Lord Nandagopa where festoons and flags fly high. Yesterday, our gem-hued Lord gave a promise to see us. We have come pure of heart to sing his revel lie. Pray do not turn us away. O Noble One, unlatch the great front-door and let us enter.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்