விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ*  சில் என்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்* 
    வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்*  வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக* 
    ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை*  எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்* 
    வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க- வல்லானை மாயனைப் பாடு-ஏலோர் எம்பாவாய்.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இளம் கிளியே - இளமை தங்கிய கிளி போன்றுள்ளவளே!
எல்லே - (இஃது) என்னே!
இன்னம் - இத்தனை பெண் பிள்ளைகள் திறண்டுவந்த பின்பும்
உறங்குதியோ - தூங்குகின்றாயோ? (என்று உணர்த்த வந்தவர்கள் கேட்க;)
நங்கைமீர் - பெண்காள்!

விளக்க உரை

உரை:1

எல்லாப் பெண்களுடைய திரட்சியையுங் காணக்கருதிக் கிடப்பாளொருத்தியை உணர்த்தும் பாசுரம், இது. கீழ்ப் பத்துப்பாட்டிலும் நிகழ்ந்த வினாவிடைகள் இப்பாட்டில் வெளிப்படையாகக் காணப்படும். “புள்ளுஞ் சிலம்பினகாண்” என்ற பாட்டுத் தொடங்கிக் கீழ்ப்பாட்டளவுமுள்ள ஒன்பது பாட்டுக்களிலும் உணர்த்துமவர்களுடைய பாசுரமொன்றேயன்றி உறங்குமவளுடைய ஆபோதிரூபமான பாசுரமொன்றும் வ்யக்தமாகக் காணப்படவில்லை; அது, சொற்றொடை நோக்கி அவதாரிகையாக எடுத்துரைக்கப்பட்டது; இப்பாட்டிலோவென்னில்; முதலடி – உணர்த்தமவர்களின் பாசுரம்; இரண்டாமடி – உறங்குமவளின் பாசுரம்மூன்றாமடி – உணர்த்துமவர் பாசுரம்; நான்காமடி உறங்குமவள் பாசுரம்; ஐந்தாமடி – உணர்த்துமவர் பாசுரம்; ஆறாமடியில், முற்கூறு – உறங்குமவள் பாசுரம்மேல்முழுதும் - உணர்த்துவர் பாசுரம். ஆறாயிரப்படி அருளிச்செயல் :- “திருப்பாவையாகிறது இப்பாட்டிறே, பகவத் விஷயத்திலிருக்கும்படி யெல்லாம் *சிற்றஞ் சிறுகாலையிலே* சொல்லுகிறது; பாகவத விஷயத்திலிருக்கும்படி யெல்லாம் இப்பாட்டிலே சொல்லுகிறது” என்று.

உரை:2

அடியே! இளமையான கிளி போன்றவளே! இன்னுமா தூங்குகிறாய்? கத்தாதீர்கள் பெண்களே! இதோ வருகின்றேன்!உன் பேச்சு மட்டும் பலமாக இருக்கிறது. உன் வாயைப் பற்றி முன்பே அறிவோம்! நீங்கள் தான் வாயாடிகள்! என்னையா வாயாடி என்கிறீர்கள்?! சொல்லிவிட்டு போங்கள்! சீக்கிரம் நீ வருவாய்! உனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?! எல்லாரும் வந்தார்களா? வந்துவிட்டார்கள்! நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள்!வலிமையுடைய குவலயாபீடம் என்னும் யானையைக் கொன்றவனை, பகைவர்களின் பகையை அழிக்க வல்லவனை, மாயனைப் பாடுவோம்!

English Translation

“What is this, Pretty Parrot! Are you still sleeping?” Do not use icy words, Sisters, I am coming”. “You are the harsh tongued one; we have known you long enough”.”Oh, your words are stronger till, just leave me alone!”. “Why this aloofness, come join us quickly”. “Has everyone come?” “Everyone has come. Count for yourself!”. “Let us all join in chorus and sing of the Lord who killed the strong elephant Kuvalayapida in rut, and the demon king Kamsa”.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்