விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அம்பரமே தண்ணீரே சோறே அறஞ் செய்யும்*  எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்* 
    கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே*  எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்* 
    அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த*  உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் *
    செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா*  உம்பியும் நீயும் உகந்து-ஏலோர் எம்பாவாய்.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம்பரமே - வஸ்த்ரங்களையே
தண்ணீரே - தீர்த்தத்தையே
சோறே - சோற்றையே
அறம் செய்யும் - தருமமாக அளிக்கின்ற
எம்பெருமான் நந்தகோபாலா - எமக்கு ஸ்வாமியான நந்தகோபரே!

விளக்க உரை

உரை:1

திருவாசல் காக்கும் முதலிகளின் அநுமதிகொண்டு உள்ளே புகுந்த ஆய்ச்சிகள் ஸ்ரீநந்தகோபரையும் யசோதைப் பிராட்டியையும் கண்ணபிரானையும் நம்பி மூத்தபிரானையும் திருப்பள்ளி யுணர்த்தும் பாசுரம், இது. “பர்த்தாவினுடைய படுக்கையும் ப்ரஜையினுடைய தொட்டிலையும் விடாத மாதாவைப் போலே” என்றும், “ஸ்ரீநந்தகோபரையும் க்ருஷ்ணனையும் விடாத யசோதைப் பிராட்டியைப் போலே” என்றும், (முமுக்ஷுப்படியில்) அருளிச்செய்தபடி, முதற்கட்டில் கண்ணபிரானும், நான்காங்கட்டில் நம்பி மூத்தபிரானும் பள்ளிக்கொள்வது முறையாதலால், அம்முறையை அடியொற்றி உணர்த்தியவாறு. கண்ணனை ஆய்ச்சிகள் களவுகாண்பார்கொள்! என்னுமச்சத்தினாலும் நந்தகோபர்முன்கட்டில் கிடப்பராம். இதில், முதலிரண்டடிகள் நந்தகோபரை உணர்த்தும். நந்தகோபருடைய கொடை மேன்மையைக் கூறும் முதலடி. “வஸ்த்ரேண வபுஷா வாசா” என்றபடி மேனிக்கு நிறங்கொடுக்கும் பொருள்களில் முதன்மையான ஆடைகளையும், தாரகமான தண்ணீரையும், போஷகமான சோற்றையும் வேண்டுவார்க்கு வேண்டியபடி அறமாக அளிக்கவல்லவனே! என்றபடி. “அறஞ் செய்யும்” என்றமையால், புகழைப் பயனாகக் கருதாமல் கொடையையே பயனாகப் பேணிக்கொடுக்கின்றமை விளங்கும். யாசகர்கள் கொண்டவல்லது தரிக்கமாட்டாதவாறுபோல, இவர் கொடுத்தவல்லது தரிக்கமாட்டாரென்பது ஆழ்ந்தக் கருத்து. “அம்பரமே தண்ணீரே சோறே” என்ற ஏகாரங்கள் பிரிநிலைப் பொருளனவாய், வஸ்த்ரங்களை மாத்திரம் தானஞ்செய்பவன், தண்ணீரை மாத்திரம் தானஞ்செய்பவன், சோற்றை மாத்திரம் தானஞ்செய்பவன் என்னும் பொருளைத்தரும். அம்பரமும் தண்ணீரும் சோறும் நந்தகோபன் தானஞ் செய்ததாக எங்குங் கண்டதில்லை. அப்படியிருக்க இங்கே இவர்கள் இப்படி கூறுவது எது கொண்டென்னில், இவையெல்லாம் தானஞ் செய்தமை கண்ணபிரானிடத்துந் கண்டதாதலால் இவனுக்குக் காரண பூதனான நந்தகோபனிடத்திலே ஏறிட்டுச் சொல்லுகிறபடி போலும். “காரணகுணாஹீ கார்யே ஸங்க்ராமந்தி” என்கிற நியாயத்தைக் கருதிக் கூறலாமன்றோ.

உரை:2

ஆடைகளும் தண்ணீரும் சோறும் அளவில்லாமல் தானம் செய்யும் எங்கள் தலைவனே நந்தகோபாலா எழுந்திடுவாய்!கொடியைப் போன்ற பெண்களுக்கு எல்லாம் கொழுந்து போன்றவளே! எங்கள் குலவிளக்கே! எங்கள் தலைவியே யசோதையே எழுந்திடுவாய்!வானத்தை ஊடு அறுத்து ஓங்கி உலகங்கள் எல்லாம் அளந்த தேவர்கள் தலைவனே கண்ணனே! உறங்காது எழுந்திடுவாய்!செம்பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழலை அணிந்த திருவடியை உடைய செல்வா! பலதேவா! உன் தம்பியும் நீயும் உறங்கா வேண்டாம்!

English Translation

O Lord, who gives us food, water and shelter, pray wake up! Lady Yasoda, light and fragrance of the cowherd clan, wake up. O king of celestials, who ripped through space and spanned the worlds; O pure golden feet, our wealth, Baladeva! We pray that you and your brother sleep no longer.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்