விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற,*
  அன்னவர்தாம் கண்டீர்கள் ஆயிரக்கண் வானவர்கோன்,*

  பொன்னகரம் புக்குஅமரர் போற்றிசைப்ப,*  -பொங்கொளிசேர்-  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற அன்னவர் தாம் - (புருஷார்த்தங்களில்) முதலதாக நான் எடுத்துச் சொன்ன தருமத்தின் வழியிலே அநுஷ்டானஞ் செய்தவர்கள்
ஆயிரம் கண் வானவர் கோன் பொன் நகரம் புக்கு - ஆயிரங் கண்ணுடையனான இந்திரனுடைய அழகிய லோகத்திற்சென்று சேர்ந்து

விளக்க உரை

இனி, தாம் பற்றின புருஷார்த்தம் காமம் என்று சொல்லவேண்டி, மற்ற தருமம் அர்த்தம் என்ற இரண்டு புருஷார்த்தங்களால் பெறக்கூடிய பேறு இன்னது, இப்படிப்பட்டது –என்று நிரூபிக்கத் திருவுள்ளம்பற்றி, தருமத்தை அநுஷ்டிப்பவர்கள் பெறும்பேறு இன்னதென்கிறார். “ஆயிரக்கண் வானவர்கோன்“ என்று தொடங்கி “இன்னமுதம் மாந்தியிருப்பர்“ என்னுமளவும் தாம் புருஷார்த்தத்தினால் ஸவர்க்கலோகத்தல் கிடைக்கும் விஷயகோகங்களை விரிவாக்ச் சொல்லுகிறது.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்