- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கீழ்ப்பாட்டில் ‘மாலை நன்னாவிற்கொள்ளார் நினையாரவன் மைப்படியே’ என்று உலகத்தாரைப் பழித்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘நீர்தாம் நம்மை உள்ளபடியறிந்து சொல்ல வல்லீரோ?’ என்று திருவுள்ளம் பற்றினதாக ஆழ்வார் கருதி, ‘பிரானே! உலக்ஷணரான வைதிகர்களே உன்னை உள்ளபடியறிந்து செல்லவல்லார்; நான் அவர்கள் போன வழியே போவதற்கு மாத்திரமே உரியன்’ என்று இப்பாட்டால் விண்ணப்பஞ்செய்கிறார். கண்டார் கண்குளிரும்படியான உனது திருமேனியையும் சிவந்த தாமரைமலர் போலேயிருக்கிற திருக்கண்களையுமுடையான உன்னுடைய திருவடித் தாமரை மலர்களை, கேட்டார் வாய்க்கேட்கைன்றியே மெய்யாகக் கண்டு தலைமேற்கொண்டு அநுபவிக்குந் தன்மையுடையவர்கள் யாரென்னில், வேதவேதாந்த ஞானத்திற் சிறந்த மஹான்களேயாவர், அறிவாளியான நானும் அவர்களைப் போலே ஏதோ சில சொல்லுகிறேனே. இஃது என்னென்னில், நன்றாகக் கண்தெரிந்த பசுக்கள் ஊர்புகுந்து சேர்ந்தவாறே நிலை கண்டு மகிழ்ந்து அந்த மகிழ்ச்சிக்குப் போக்குவீடாகக் கனைத்தல் செய்ய கண்ணில்லாத குருட்டுப் பசுவும் அதுகேட்டுத் தான் இன்னதென்றறியாமலே ஒக்கக் கனைக்குமென்று உலகம் சொல்லுகிற விதமாகவே வேதகவைதிக புருஷர்கள் சொன்ன பாசுரத்தைக் கேட்டுவைத்து நானுஞ்சொன்னேனத்தனை; செல்லுதற்கு அடியான் ஸம்பந்தமுடையவனும் பக்தி பரவசப்பட்டவனுமான நான் அப்படியல்லாமல் என் ஞானத்தாலே கண்டு என் சக்தியாலே சொன்னேனென்னவல்லேனோ? என்றாராயிற்று. இப்பாசுரத்தை ஒருபுடை திருவுள்ளம்பற்றி ஸ்ரீகுணரத்நகோசத்தில் பட்டம் அருளிச்செய்த ‘இத்யுக்திகைதவசதேக விடம்பயாமி தாநம்ப! ஸத்யவசஸ: புருஷாந்புரணார்- யத்வா நமே புஜபலம்தவ பாரதபத்மவாபே’ என்ற ச்லோகம் இங்கு ஸ்மரிக்கத்தாகும்.
English Translation
Only the pure Vedic seers are fit to wear your excellent lotus-feet on their heads. Like a blind cow going out to graze, with the herd I too, offered praise, what else can I say of my lowly self?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்