விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு,*  அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்* 
  மூது ஆவியில் தடுமாறும்*  உயிர் முன்னமே,*  அதனால்- 
  யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும்*
  மாதாவினை பிதுவை,*  திருமாலை வணங்குவனே. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உயிர் - உயிரானது
முன்னமே - நெடுநாளாகவே
மூது ஆவியில் - பழமையான (பலவகைப்) பிறப்புகளுள்
யாது ஆனும் ஓர் ஆக்கையில் -யாதாயினும் ஒரு சரீரத்தில்
புக்கு - பிரவேசித்து

விளக்க உரை

ஒன்றன்பின் ஒன்றாக அநாதியாய் வருகிற சரீர ஸம்பந்தங்கள் காரணமாக- கழித்திடாமல் என்னை அங்கீகரித்தருள வேணுமென்று அடியேன் ஸகலவித பந்துவும் ஆபத்பந்துவுமான எம்பெருமானைச் சரணமடைந்திருப்பேனென்று தமது ப்ரபந்திமார்க்கா நுஷ்டாக வுறுதிநிலையை ஆழ்வார் இப்பாட்டால் வெளியிடுகிறார். ஆத்மாவானது அநாதிகாலமாகவே ஊழ்வினைக்கு ஏற்ப யாதாயினும் ஒரு டம்பினுட்புகுந்து அதில் விளைவிலங்காற் கட்டுப்பட்டிருக்கும் அவ்வுடம்பின் தொடர்ச்சி நீங்கியும் ஸூக்ஷ்ம சரீரத்தில் நின்று ஸ்வர்க்க நாதங்களிற்புக்கு மீண்டு தடுமாற நிற்கும்; இப்படி ஆத்மாவுக்கு சரீரத்தில் நின்று ஸ்வர்க்க நாங்களிற்புக்கு மீண்டு தடுமாற நிற்கும்; இப்படி ஆத்மாவுக்குச் சரீர ஸம்பந்தம் அநாதியாயிருத்தலால் ப்ராசீக கர்மவாஸநா வசத்தான் ஏதேனுமொரு பொருளினிடத்துப் பற்றச் செய்து எம்பெருமானை விட்டு விலகும்படியான கோட்பாட்டை முற்றும் வேரோடு அற நன்றாக விடுவித்துத் தன்னையே பற்றியிருக்குமாறு செய்விக்கவல்லவனாய், ப்ரியங்களை நடத்துவதில் தாய்போன்றவனாய், ஹிதங்களை நடத்துவதில் தந்தை போன்றவனாய்த் திருமகள் கணவனான ஸ்ரீமந்நாராயணனைச் சரணமடைந்திருப்பேனென்கிறார். அநாதியாய் வருகிற ஸம்ஸாரத்திலே பற்றில்லையாம்படி சரணமடைந்தாருடைய வினைகளைப் போக்குவிக்கவல்ல எம்பிரானை யான் வணங்குவேனென்றாராயிற்று

English Translation

Seeing every soul fall and flounder through repeated cycles of birth and death in various bodies, the lord Tirumal-benevolent as mother and father, -comes to our rescue and frees us before we get stuck in needless despair, I worship him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்