விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சிதைக்கின்றது ஆழி*  என்று ஆழியைச் சீறி,*  தன் சீறடியால்-
  உதைக்கின்ற நாயகம்*  தன்னொடு மாலே,*  உனது தண் தார்-
  ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்ப்* 
  பதைக்கின்ற மாதின்திறத்து*  அறியேன் செயற்பாலதுவே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாலே - எம்பெருமானே
ஆழி - கூடல் வட்டமானது
சிதைக்கின்றது - காரியத்தைக் கெடுக்கின்றது
என்று - என்ற காரணத்தினால்
ஆழியை - அக்கூடல் வட்டத்தை

விளக்க உரை

கூடலிழைத்து வருந்தாநின்ற தலைவியின் நிலையைப் பாங்கி தலைவனுக்கு உணர்த்துவதாம் இது. நாயகனான எம்பெருமானைக் கூடுகைக்குக் கூடவிழைத்து அது கலங்குகையாலே நோவுபடுகிற நாயகியின் வருத்தத்தைக் கண்டு தோழி கலங்கி யுரைக்கின்றாள் என்க. கூடலிழைத்தலாவது- நாயகனைப் பிரிந்த நாயகி கூடல் தெய்வத்தை வாழ்ததி மணலில் வட்டமாக ஒரு கோடு கீறி அதனுட் சுழிசுழியாகச் சுற்றுஞ் சுழித்து இரண்டிரண்டாகக் கணக்கிட்டு அக்கணக்கு இரட்டைப் பட்டால் பிரிந்த தலைவர் வந்து கூடுவாரென்றும் ஒற்றைப்பாட்டால் வந்து கூடாதென்றும் குறி பார்ப்பதொரு ஸம்ப்ரதாயம். நாச்சியார் திருமொழியில் “தெள்ளியார் பலர் கைதொழுந்தேவனார்” என்னுந் திருமொழியில் ஆண்டாள் *கூடலிழைப்பது காண்க. அவ்விடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அரும்பதவுரையில் “கூடலாவது- வட்டமாகக் கோட்டைக் கீறி அதுக்குள்ளே சுழி சுழியாகச் சுற்றுஞ் சுழித்து இவ்விரண்டு சுழியாகக் கூட்டினால் இரட்டைப் பட்டால் கூடுகை, ஒற்றைப்பட்டால் கூடாமை என்று ஸங்கேதம்” என்றுரைக்கப்பட்டுள்ளது. திருக்கோவையாரின் (186.) “ஆழிதிருந்தும் புலியூருடையான் அருளினளித்து ஆழிதிருத்தும் மணற்குன்றினித் தகன்றார் வருகென்று, ஆழிதிருத்திச் சுழிக்கணக்கோதி நையாமல் ஐய, வாவிதிருத்திததாக்கிற்றியோ உள்ளம் வள்ளலையே” என்ற செய்யுளில் ‘ஆழிதிருந்திச் சுழிக்கணக்கோதி’ என்றதும் இல்லை.

English Translation

O Adorable Lord! This girl draws circles in the sand with her toe and counts, then seeing the omens read ill, she angrily erases them with her foot. Her heart is always set on wearing your cool Tulasi garland, she raves, I do not know what I can do for this girl.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்