விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நானிலம் வாய்க் கொண்டு*  நல் நீர் அற மென்று கோது கொண்ட,*
  வேனில் அலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை,*  கடந்த பொன்னே!- 
  கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகாஉது* அம் பூந்-
  தேன் இளஞ் சோலை அப்பாலது,*  எப்பாலைக்கும் சேமத்ததே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கால்நிலம் - (முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும்) நால்வகை நிலங்களையும்
வாய்கொண்டு - (தன் கிரணமுகத்தாலே) வாயிற் பெய்து கொண்டு
கல்நீர் அறமென்று - ஸாரமான நீர்ப்பசை அறும்படிமென்று
கோது கொண்ட - அஸாரமான பாகம் இது வென்று அறிந்த
வேனில் அம் செல்வன் - வெப்பத்தைத் தனக்குச் செல்வமாகவுடைய ஸூர்யன்

விளக்க உரை

நகர் காட்டல் என்பது இப்பாட்டுக்குத் துறை. நாயகன் நாயகியை உடன் கொண்டு இடைவழிப் பாலை கடந்து தன் ஊர்க்குப் போகும்போது அவளுக்கு வழி நடைவிளைப்புத் துன்பம் தோன்றாதிருக்கும் பொருட்டு அவளை நோக்கி ‘அதோ தெரிகின்ற அப்பெரிய நகர் காண் நம்முடைய நகராவது’ என்று தனது நகரைக் காட்டி ஸாமீப்பம் தோன்றக் கூறுதல் நகர் காட்டலாம். “புணர்ந்து உடன் போன தலைமகன், நடந்து இளைத்த தலைவியைக் குறித்து இடந்தலைப்பெய்தமை சொன்ன பாசுரம்” என்பது அழகிய மணவாள சீயருரை வாக்கியம். நாயகனும் நாயகியும் தாம் ஒருவர்க்கொருவர் தனி நிழலாயிருக்கையாலே இவர்களுக்கு இந்நிலத்தின் கொடுமையாலுண்டாகு மிளைப்பு இல்லையேயாகிலும் பொழுது போக்குக்காக நாயகன் நாயகியை நோக்கி இங்ஙனங் கூறினதென்றதுமுண்டு. நாயகீ! நம்முடைய வழி நடையிலல் தைவாதீனமாய்ப் பாலை நிலம் தாண்டியாயிற்று; அது இனித்தாண்ட வேண்டியதாயிருந்தால் வெகு கஷ்டப்பட வேண்டியதாகும்; நல்ல காலமாய் அதைத் தாண்டிவிட்டோம்; இனி நமது நகர் சமீபத்திலுள்ளதே காண் என்கிறான். ஸூரியனானவன் நால்வகை நிலங்களையும் தன் கிரண முகத்தாலே வாயிற் பெய்துகொண்டு ஸாரமான நீர்ப்பசை அறும்படி நன்றாக மென்று அஸாரத்தை உமிழ்ந்த பாகமே பாலை நிலமாகும்; அதனைத் தாண்டியாயிற்று.

English Translation

The hot-tempered Sun eats up the four-parted Earth, Sucks in the juice and spits out the dry desert, O Precious girl who has just crossed that region! Celestials come down to Earth and worship the lord Krishna in Vehka, which is close at hand, Just beyond it is the fragrant nectar-grove-surrounded Tiruttankal. If gives relief to one in any condition, So hold on!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்