விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சேமம் செங்கோன் அருளே,*  செறுவாரும் நட்பு ஆகுவர் என்று- 
    ஏமம் பெற வையம்*  சொல்லும் மெய்யே,*  பண்டு எல்லாம் அறை கூய்- 
    யாமங்கள் தோறு எரி வீசும் நம் கண்ணன் அம் தண்ணம் துழாய்த்*
    தாமம் புனைய,*  அவ் வாடை ஈதோ வந்து தண்ணென்றதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செறுவாரும் நட்பு ஆகுவர் என்று - பிரதிகூலரும் அநுகூலராவர் என்று
ஏமம் பெற - உறுதிபொருந்த
வையம் சொல்லும் - உலகத்தோர் கூறுகிற
மெய்யே - உண்மைமொழியின் படியே,
அ வாடை - அந்தக் காற்றானது

விளக்க உரை

நாயகனான ஸர்வேச்வரனுடைய திருத்துழாய் மாலையைத் தரிக்கப்பெறுகையாலே இதற்கு முன்பு துன்பஞ் செய்துகொண்டிந்த வாடை இப்போது தணிந்தபடியை நாயகி உட்கொண்டுரைத்த பாசுரம் இது. பிரிவை ஆற்றமாட்டாமல் மிக வருந்துகின்ற நாயகியை ஒருவாறு தேற்றுவிக்க விரும்பின நாயகன் இரவிடத்து ஸம்ச்லேஷித்ததாகத் தோன்றுவித்தது என்னவுமாம். எவ்வளவு துன்பங்கள் அடர்ந்தாலும் அவற்றுக்குச் சலியாமல் எம்பெருமானது திருவருளே நம்மைப் பாதுகாப்பது’ என்று உறுதிகொண்டிருந்தால் பகைவரும் கண்பாரவா என்று உலகத்திற் பெரியோர் கூறுவதுண்டு; அது இப்போது மெய்யாயிற்று; எங்ஙனேயென்னில்; வாடையானது முன்பெல்லாம் பகைத்து எதிர்வந்து போருக்கு அழைத்து இரவுகள் தோறும் அக்நிஜ்வாலையை எம்மேல் வீசுந்தன்மை யுடையதாயிருந்தது; இப்போது நமது நாயகனுடைய அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையை யாம் பெற்றுத் தரித்ததனால் அவ்வாடை தானே இதோ வந்து குளிர்ச்சி செய்யாநின்றது காண்மின் என்று- தலைவி தாரபெறறு மகிழ்ந்தமை சொல்லுகிறது.

English Translation

Happily, the popular saying that even enemies become friends when a person is in the king's favour has come true!! The breeze that hitherto had been breathing fire over me age after age, has now become cool and pleasant, after receiving the Tualsi garland of the lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்