விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஞாலம் பனிப்பச் செறுத்து,*  நல் நீர் இட்டு கால் சிதைந்து* 
  நீல வல் ஏறு பொராநின்ற வானம் இது,*  திருமால்-
  கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு*  தண் பூங்-
  காலம் கொலோ அறியேன்,*  வினையாட்டியேன் காண்கின்றவே? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஞாலம் பணிப்ப - உலகம் நடுங்கும்படி
செறித்து - கம்மில்தாம் நெருங்கி
நல் நீர் இட்டு - (தம் உடம்பின்) நீரை நன்றாக வெளிச்சிந்தி
கால் சிதைந்து - கால்களால் தரையைக் கீறிக்கொண்டு
நீலம் வல் ஏறு - கரியவலிய எருதுகள்

விளக்க உரை

"காலமயக்கு" என்னுந்துறையில் அமைந்ததாம் இப்பாசுரம். இத்துறைதானே திருக்கோவையரில் ‘காலமறைத் துரைத்தல்’ என வழங்கப் பெற்றுள்ளது. நாயகியோடு கூடியிருந்த நாயகன் ஒரு காரியப் பாடாகத் தேசாந்தரஞ் செல்லவேண்டி ‘மாதே! நான் இஎபோது புறப்பட்டுப்போய்க் கார்காலத்திலே திரும்பி வருகின்றேன்’ என்று சொல்லிக் காலங்குறித்துப் பிரிந்து சென்று அக்கார்காலம் வந்தவளவிலும் தான் வராதிருக்க, ‘அந்தோ! நாயகன் குறிப்பிட்ட காலம் வந்துவிட்டதே!, இவ்வளவில் அவன் வந்திலனே!’ என்று கார் காலவரவையும் காதலன் வராமையையும் நோக்கி வருந்துகின்ற தலைவியைத் தோழியானவள் ‘கங்காய்! நீ என் வீணே வருந்துகின்றாய்? மெய்யே கார்காலம் வந்தாலன்றோ காதலன் வந்திடுவான்; அவன் சொல்லிப்போன கார்காலம் வரவில்லை; கார்காலமன்றாகில் இதோ மழை பெய்கின்றதே; இஃது என்? என்று கேட்பாய்; வானத்தில் நெருங்கி நீர் சொரிபவை மேகங்களல்ல; ஒன்றோடொன்று போர்செய்கிற கறுத்த எருதுகளைக் கண்டு மேகமாக மயங்குகின்றாயத்தனை; அவை கரிய காளைகளேயன்றி மேகங்களல்ல; பெய்கின்றது மழைநீரன்று; அக்காளைகளின் வியர்வை நீரும் சிறுநீரும் பெருகுவதைக் கண்டு மழைநீராக மயங்குகின்றாய்த்தனை’ என்று தலைவியை ஒருவாறு ஆற்ற வேண்டிக் காலத்தை மயக்கிக் கூறுகின்றாள் தோழி.

English Translation

Are they snorting black bulls that I see in the sky, locked in a battled with bent knees drenching the Earth with their hot piss, or are they the sentinels of death bearing the cool fragrant crest of Tirumal, come to take a deserted lover? Alas, hapless me! I do not know.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்