விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  குழல் கோவலர் மடப் பாவையும்*  மண்மகளும்*  திருவும்,-
  நிழல்போல்வனர் கண்டு*  நிற்கும்கொல் மீளும்கொல்,*  தண் அம் துழாய்-
  அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழ கடவும்*
  தழல் போல் சினத்த*  அப் புள்ளின் பின் போன தனி நெஞ்சமே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தண் அம் துழாய் - குளிர்ந்த அழகிய திருத் துழாயை யுடையவனும்
அழல் போல் அடும் சக்ரத்து - (அஸுர ராக்ஷஸர்களை) நெருப்புப்போல் அழிக்கின்ற திருவாழியை யுடையனுமான
அண்ணல் - எம்பெருமான்
விண்ணோர் தொழகடவும் - மேலுலகத்தவர் வணங்கும்படி ஏறி நடத்துகிற
தழல்போல் சினத்த - பள்ளின் பின்போன

விளக்க உரை

நாயகனுடைய பிரிவுக்கு ஆற்றாக நாயகி நெஞ்சழிந்து உரைக்கும் பாசுரம் இது. கீழ்ப்பாட்டில், தன்னுடைய வேறுபாடான நிலைமைக்கண்டு வியந்துரைத்த தோழியை நோக்கி ‘அவன் பக்கல்போன என்னெஞ்ச மீண்டுவருமோ? வாராதேபோய் விடுமோ?’ என்கிறளென்க. எம்பெருமான் ஆழ்வார்க்கு ஸேவை ஸாதிக்கும் பொருட்டுக் கருடன்மேலேறி வந்து ஸேவை ஸாதித்துவிட்டுத் திரும்பியெழுந்தருளினன்; ‘இக் கருடனுடைய பாக்கியமே பாக்கியம்; எம்பெருமானுடைய காட்சி நமக்குக் கனவிலுங் கிடைப்பது அரிதாயிருக்கின்றது; இக்கருடன் இரவு பகலென்னும் லெப்போதும் இப்பெருமானைச் சுமந்து திரிகிறானே! இப்பரம பாகவதனுடைய பாக்கியம் விலக்ஷணமானது!’ என்று ஆழ்வார் கருதினார்; உடனே இவ்வருடைய திருவுள்ளம் அக்கருடன் பின்னேபோயிற்று. அவன் புகுந்த பரமபதத்தளவும் நெஞ்சும் போயிற்று; போனவிடத்திலே பெரிய பிராட்டியார் பூமிப்பிராட்டியார் நப்பின்னைப் பிராட்டியார் என்னும் தேவிமார் மூவரும் எம்பெருமானுக்கு நிழல்போலே இருக்கும்படியைக் கண்டால் அச்சேர்த்தியழகை அனுபவிப்பதை விட்டிட்டு மீண்டுரவத் தோன்றுமோ? தோன்றுவது அருமை; அச்சேர்த்தியழகைக் கண்டுகொண்டு அவ்விடத்திலேயே நின்று விடுமோ, அன்றி, ‘நம்முதலாயினிடம் நாம்போய்ச் சேர்ந்து விடுவோம்’ என்று கொண்டு திரும்பி வந்திடுமோ? என்று ஸம்சயிக்கிறபடி.

English Translation

The flute-playing cowherd-Lord, the benevolent one, with Nappinnai, Earth Dame and lotus fiercely destructive discus and rides the fiercely angry Garuda bird. Will my lonely heart that went after him remain there or return? Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்