விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மகன்ஒருவர்க்கு அல்லாத*  மாமேனி மாயன்,*
    மகன்ஆம் அவன்மகன் தன்*  காதல் மகனைச்*
    சிறைசெய்த வாணன்தோள்*  செற்றான் கழலே* 
    நிறைசெய்து என் நெஞ்சே! நினை.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாணன் - பாணாஸுரனுடைய
தோள் - தோள்களாயிரத்தையும
செற்றான் - அறுத்தொழித்தவனான பெருமானுடைய
கழலே - திருவடிகளையே
நிறை செய்து - பூர்த்தியாக

விளக்க உரை

எம்பெருமானோவென்னில், தாயும், தந்தையுமா யிவ்வுலகினில் வாழும் வாயுமீசன், அவன் ஸகல்லோக பிதாவாய்க் கொண்டு எல்லாரையும் தனக்கு மக்களாக வுடையவனேயன்றித் தான் ஒருவற்கும் மகனாயிருக்கத்தக்கவனல்லன், அஸ்மதாதிகளைப் போலே கருமங் காரணமாக அவன் பிறவாவிடினும் அநுக்ரஹம் காரணமாகப் பலபல யோனிகளிலும் பிறக்குமடைவிலே நந்தன் மகனாக ஒரு பிறவி பிறந்தான். அப்பிறவியில், தனக்கொரு மகனும் அவனுக்கொரு மகனும் ஆகப் பேரன்வரையில் பெற்றுவிட்டான், (தன் மகன் – ப்ரத்யம்நன் அவனது மகன் –அநித்ருதன்) பாணாசுரனுடைய பெண்ணாகிய உஷை என்பவள் ஒருநாள் அவ்வநிருத்தனோடே தான் கூடியிருந்ததாகக் கனாக்கண்டு தனது தோழியான சித்திரலேகையின் யோகவித்தை மஹிமையினால் அவனை த்வாரகையில் நின்றும் தூக்கிக்கொண்டுவரச்செய்து அவனோடுபோகங்களை அநுபவித்துக்கொண்டுவர இச்செய்தியைக் காவலாளராலறிந்த பாணாசுரன் தன் சேனையுடன் அநிருத்தனை எதிர்த்து மாயையினாலே பொருது நாகாஸ்திரத்தினாற் கட்டிப்போட்டிருக்க த்வாரகையிலே அநிருத்தனைக்காணாமல் யாதவர்களெல்லாரும் கலங்கியிருந்தபோது நாரதமுனிவனால் ஸமாசாரமறிந்த கண்ணபிரான் பெரியதிருவடியின் மேலேறிக்கொண்டு பலராமன் முதலானாரோடு பாணபுரத்திற்கு எழுந்தருளிக் கார்த்திகையானுங் கரிமுகத்தானும் கனலும் முக்கண்மூர்த்தியும மோடியும் வெப்பும் முதுகுகாட்டிப் போகும்படிசெய்து சக்ராயுதத்தைப் பிரயோசித்துப் பாணனது தோள்களையும் தாரைதாரையாய் உதிரமொழுக அறுத்தான், அப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருவடிகளையே தமது திருவள்ளத்தில் நிறைத்துக்கொள்ள விரும்பினாராயிற்று.

English Translation

The child who was not hers, was bright and full of wonders. When his grandson Aniruddha was imprisoned by Bana, he cut the thousand arms of the Asura. Dwell him completely, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்