விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உணரில் உணர்வுஅரியன்*  உள்ளம் புகுந்து*
  புணரிலும் காண்புஅரியன் உண்மை,* - இணர்அணைய
  கொங்குஅணைந்து வண்டுஅறையும்*  தண்துழாய்க் கோமானை,*
  எங்குஅணைந்து காண்டும் இனி?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அணைந்து - வந்துகிட்டி (மதுவைப்பருகி)
அறையும் - ரீங்காரம் செய்யப்பெற்ற
தன் - குளிர்ந்த
துழாய் - திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனான
கோமானை - அப்பெருமானை

விளக்க உரை

கீழ்ப்பாட்டில். “நினைக்குங்கால் நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை உணர்வு ஓராது நிற்பது என்கொலோ!“ என்று வருந்தினார், இங்ஙனே நாம் வருந்துவது எதுக்கு? ஒருவர்க்கும் ஒருவகையாலும் அறியவெண்ணாதபடியன்றோ அப்பெருமானுடைய ஸ்வரூபமிருப்பது, விஷணம் அப்படியிருக்கும்போது வீணாக நெஞ்சை நொந்துகொள்வதில் பயனென்? இனி அவனை நாம் கிட்டிக்காணும் விரகு என்னோ! என்று தம்மில்தான் குழைகின்றார். ‘உணரில் உண்மையுணர்வரியன், உள்ளம்புகுந்து புணரிலும் உண்மை காண்பரியன்‘ –நம்முடைய முயற்சியாலே அவனுடைய உண்மை காணமுடியாதது என்பது மாத்திரமேயல்ல, “தாம் தம் பெருமையறியார்“ என்றும் “தனக்குந்தன் தன்மையறிவரியான்“ என்றுஞ் சொல்லுகிறபடியே அவன்றனக்கும் அறிய நிலமல்லாத உண்மையை அவன்றானும் நமக்கு அறிவிக்கவல்லனல்லன் என்றவாறு.

English Translation

He is hard to compherend through evelatory texts. Though he is in our hearts, it is difficult to feel his presence there too. If that be the case, where indeed can we see the Lord who wears the bee-humming nectar-dripping cool Tulasi garland?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்