- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமான் பெரிய மாயக்காரன் என்று பலர் சொல்லுவர்கள், அதாவது 1. “வந்தாய்போலே வாராதாய் வாராதாய்போல் வருவானே“ என்னுமாபோலே –கரைபுரண்ட மாநஸாநுபவமரத்தினால் கைக்கு எட்டினவனாக நினைக்கலாம் படி யிருந்தும், ‘ஒருநாளும் அவன் கைக்கு எட்டமாட்டான்‘ என்றிருக்கச் செய்தேயும் ஸ்வேச்சையாலே வந்து கைக்கு எட்டியும் இப்படி மாயாவியாயிருப்பவன் என்பர்கள், மற்றுஞ் சிலர் ‘அப்பெருமான் ஒருகாலும் ஒருவர்க்கும் காணமுடியாதவன்‘ என்பர்கள், மற்றுஞ் சிலர் ‘அப்பெருமான் ஒருகாலும் ஒருவர்க்கும் காணமுடியாதவன்‘ என்பர்கள், யார் எப்படி சொன்னாலும் எனக்கென்ன, அவன் மாயாவியாகவே யிருக்கட்டும், காண்பரியனாகவே யிருக்கட்டும், தன் உடைமையைப் பெறுகைகுத் தான் யாசகனாயச் சென்று அரிய பெரிய காரியஞ்செய்த அவன் என்னை மறக்க வொட்டாதபடி என் ஹ்ருதயத்திலே வந்து புகுந்துவிட்டான், இனி அவனுடைய ஸ்வரூபம் எப்படிப்பட்டதா யிருந்தால் எனக்கென்ன? என்கிறார்.
English Translation
Though he is spoken of as the wonder-Lord, through they say he is hard to see, though he measured the Earth and skywith his feet through deceit, he certaintly remains in our hearts.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்