விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பண்டுஎல்லாம் வேங்கடம்*  பாற்கடல் வைகுந்தம்,* 
  கொண்டுஅங்கு உறைவார்க்கு கோயில்போல்,* - வண்டு
  வளம்கிளரும் நீள்சோலை*  வண்பூங் கடிகை,* 
  இளங்குமரன் தன் விண்ணகர்.  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வைகுந்தம் - பரமபதத்தை
கொண்டு - இருப்பிடமாகக் கொண்டு
அங்கு - அவ்விடத்திலே
உறைவாற்கு - வாஸம்பண்ணு மெம்பெருமானுக்கு
பால் கடல் - திருப்பாற்கடலும்

விளக்க உரை

இப்பாட்டை இரண்டுவகையாக நிர்வஹிப்பதுண்டு, அவற்றுள் முதல்வகை எங்ஙனே யெனின், ஸ்ரீவைகுண்டத்தை வாஸஸ்தானமாகவுடைய எம்பெருமானுக்குத் திருப்பாற்கடல் திருவேங்கடம் திருக்கடிகை முதலிய திருப்பதிகள் முன்பெல்லாம் கோயிலாக அமைந்திருந்தன, (அதாவது –என்னுடைய நெஞ்சகம் அவனுக்குக் கோயிலாகக் கிடைப்பதற்குமுன்பு) இப்போதோ வென்னில், அவன் விரும்பியெழுந்தருளி யிருப்பதற்குப் பாங்காக என்னுடைய நெஞ்சகம் அவனுக்கு ஆலயமாகக் கிடைத்து விட்டதனால் அத்திருப்பதிகளிற் பண்ணுமாதாத்தை என்னெஞசிலே பண்ணிக்கொண்டு கிடக்கிறான் என்பதாம். மூலத்தில் ‘பண்டெல்லாம்‘ என்றவளவுக்கு இவ்வளவு விசாலமான கருத்துக்கொள்வது சிரமமென்று தோன்றினால், வேறொருவகையான நிர்வாஹம் காட்டுவோம், - ஆழ்வார் இப்பாட்டால திருக்கடிகைக்குன்றைச் சிறப்பித்துக் கூறுவதாகக்கொள்க. திருப்பாற்கடல் திருவேங்கடம் முதலிய திருப்பதிகளிற் காட்டிலும் * வண்டுவளங்கிளரும் நீள் சோலை வண்பூங்கடிகையிலே அதிகமான ஆதாரத்தைப் பெருக்கி அஃதொன்றையே கோயிலாகக் கொண்டிருக்கிற னென்பதாகக் கொள்க.

English Translation

From times of yore the Lord has been residing in the Ocean of Milk and in Venkatam, considering both as equal to his permanent home in Vaikunta. Now the youthful Lord has found a new home in kadigai, surrounded by bee-humming flower groves.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்