விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பெற்றம் பிணைமருதம்*  பேய்முலை மாச்சகடம்,* 
  முற்றக்காத்துஊடு போய்உண்டுஉதைத்து,* - கற்றுக்
  குணிலை*  விளங்கனிக்குக் கொண்டுஎறிந்தான்,*  வெற்றிப் 
  பணிலம்வாய் வைத்துஉகந்தான் பண்டு.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பெற்றம் - பசுக்களை
முற்ற காத்து - ஒன்று தப்பாமல் ரக்ஷித்தவனாயும்
பிணை மருதம் ஊடு போய் - இரட்டை மருத மாங்களிடையே சென்றவனாயும்
பேய் முலை உண்டு - பூதனையின் முலையை உண்டவனாயும்
மா சகடம் உதைத்து - பெரிய சகடத்தை உதைத் தொழித்தவனாயு

விளக்க உரை

இப்பாட்டின் முன்னடிகளில், பெற்றம் முதலிய பெயர்ச் சொற்கள் ‘காத்து‘ முதலிய வினைச்சொற்களை முறையே சென்று இயைதலால் முறைநிரனிறையாம், இது வடமொழியில் யாதஸங்க்யாலங்காரம் என்றும், தென்மொழியில் நிரனிறைபணி என்றும் அலங்கார சாஸ்த்ரிகள் கூறுவர். முதல் திருவந்தாதியிலுள்ள (54) “அரவமடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய், குரவை குடமுலை மற்குன்றம் –கரவின்றி, விட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டு கோத்தாடி, உண்ட்டெடுத்த செங்கணவன்“ என்ற பாசுரம் இத்தகையதே. “திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி செங்கனிவாயெங்களாயர் தேவே!“ என்கிறபடியே, நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனாயிருக்கு மிருப்பிலுங்காட்டில் பசுக்களை மேய்க்குந் தொழிலையே பரமபோக்யமாகக் கொண்டவன், இரட்டை மருதமரங்களினிடையே தவழ்ந்துசென்று வீரவிளையாட்டுச் செய்தவன், பேய்ச்சியின் முலையைச் சுவைத்துயிருண்டவன், பாலுக்கு அழுகிற பாவனையிலே அஸுராவிஷ்டமான சகடத்தை உதைத்துத் தள்ளினவன், கன்றாயும் விளாமரமாயும் இரண்டு அஸுரர்கள் வந்து நிற்க, முள்ளைக் கொண்டே முள்ளைக் களைவது போல இரண்டையும் ஒருசேர முடித்தவன், திருப்பவளத்திலே ஸ்ரீபாஞச ஜந்யத்தைவைத்து ஊதி வெற்றியைத் தெரிவிப்பவன் – என்று சில பகவத் கதைகளை அநுபவித்துப் பேசினாராயிற்று. கண்ணபிரானையன்றி மற்று எவனையும் கனவிலுங் கருதாதிருந்த ருக்மிணிப்பிராட்டிக்கு சிசுபாலனோடு விவாஹம் நடப்பதாகக் கோடித்து ஹித்தமாயிருந்த ஸமயத்தில் கண்ணபிரானது வரவை எதிர்கார்த்திருந்த அப்பிராட்டியின் நெஞ்சு முறிந்துபோய் இனிநாம் உயிர்துறப்பதே நல்லபாயமென்று தீர்மானித்திருந்த க்ஷணத்தில் கண்ணபிரான் பதறி ஓடிவந்த புறச்சோலையிலே நின்று தனது ஸ்ரீபாஞ்சஜந்யத்தை ஊத, அதனோசையானது அந்த ருக்மிணிப்பிராட்டியின் செவியிற் புகுந்து ஆனந்தத்தை விளைவிதத்தென்கிற கதையை ஈற்றடிக்குப் பொருத்தமாக அநுஸந்திக்கலாம். அன்றி, பாரதப்போரில் செய்த சங்கொலியுங் கொள்ளலாம்.

English Translation

In the yore the lord protected the cows, entered between the Marudu trees, drank the ogress breast and kicked a demon-cart, He threw a demon-calf against a wood-apple tree and destroyed both. He blew his victory conch in the great Bharata war of yore.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்