- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமானுடைய ஆபரணலங்காரத்திலும் கண்ணழகிலும் ஈடுபட்டு அநுபவித்துப் பேசுகிறார். இரண்டாமடியின் தனிச்சீர் ‘தெரியுங்கால்‘ என்றும் ‘திரியுங்கால்‘ என்றும் இரு வகைப்பாட முள்ளது. முந்தின் பாடத்தில், எம்பெருமான் பெரிய மலைபோன்ற தனது திருமார்பில் ரத்நஹாரத்தைச் சாத்திக் கொண்டிருக்கும்படியை அநுஸந்தித்தால் காளமேகத்திலே மின்னல் மின்னினாற்போலே யிருக்கும் என்பதாகக் கருத்தாகும். பிந்தின பாடத்தில் – எம்பெருமான் தனது திருமார்பிலே ரத்நஹாரத்தை யணிந்து கொண்டு உலாவத் தொடங்கினால் காளமேகத்தில் மின்னல் மின்னினாற்போலே யிருக்கும் என்பதாகக் கருத்தாகும். கரிய திருமார்புக்குக் காளமேகமும் ரத்நஹாரத்திற்கு மின்னலும் ஏற்றவுவமையாம். (பாணொடுஙக இத்யாதி) பாண் –இசைப்பாட்டு, அது ஒடுங்கும்படியாக (அதைவிட அதிக மதுரமாக) வண்டுகள் இசைபடப்பெற்ற தாமரைப்பூப் போலே அவனுடைய திருக்கண்கள் விளங்குகின்றன என்றவாறு.
English Translation
On his strong mountain-like chest, he wears long beautiful necklaces and gems, revealing his dark frame like a rain-cloud lit by a lightning. His long red eyes are the hue of a bee-humming lotus.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்