விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நிறம்வெளிது செய்து*  பசிது கரிதுஎன்று,*
  இறைஉருவம் யாம்அறியோம் எண்ணில்,* - நிறைவுஉடைய
  நாமங்கை தானும்*  நலம்புகழ் வல்லளே,* 
  பூமங்கை கேள்வன் பொலிவு? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உருவம் - திவ்யமங்கள விக்ரஹமானது
நிறம் - நிறத்தால் வெளுத்திருக்குமோ (அல்லது)
செய்து - சிவந்திருக்குமோ, (அல்லது)
பசிது - பச்சென்றிருக்குமோ, (அல்லது)
கரிது - கறுத்திருக்குமோ,

விளக்க உரை

“பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின் பசும் புறம் போலுநீர்மை பொற்புடைத்தடத்து வண்டுவிண்டுலாம் நீல நீர்மை“ என்றும் 2. “நிகழ்ந்தாய் பால் பொன்பசுப்புக் கார்வண்ணம் நான்கும்“ என்றும் சொல்லுகிறபடியே எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தைக் கொண்டிருப்பதாக நூல்கள் கூறுகின்றனவாயினும், 3. “என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை“ என்று கட்புலனுக்கு இலக்காக மாட்டாததாகச் சொல்லப்படுகிற எம்பெருமான் திருவுருவத்தின் நிறத்தை நான் ஒன்றுமறியேன், நானே அறியாதபோது ஸரஸ்வதிதானும் அறிந்து பேசவல்லளோ? ஏனென்னில்? (பூமங்கை கேள்வன் பொலிவு) மாரீசன் இராவணனுக்கு ஹிதோபதேசம் பண்ணும் போது மர்மறிந்து சொன்ன சொல் அறியீர்களோ? “***“ அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா“ என்றானே, (அதாவது) இராமனென்பவன் பிராட்டியைக் கைப்பிடித்த பரஞ்சோதியன்றோ? அச்சோதி நெஞ்சாலும் நினைப்பரிதன்றோ என்றானே ஆகையாலே, பூமங்கை கேள்வனானவனுடைய பொலிவைப்புகழ யாராலாகும்? என்கிறார்.

English Translation

The Lord's hues are white, red, yellow-green and also black, but we do not know the first three. Come to think, can even the knowledge-filled Dame Sarasvati fully describe the spouse-of-Dame-Lakshmi's glory?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்