விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அவனே அருவரையால்*  ஆநிரைகள் காத்தான்,* 
  அவனே அணிமருதம் சாய்த்தான்,* - அவனே
  கலங்காப் பெருநகரம்*  காட்டுவான் கண்டீர்,* 
  இலங்கா புரம்எரித்தான் எய்து. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆநிரைகள் - பசுக்கூட்டங்கள்
காத்தான் - ரக்ஷித்தருளினவன்
அவனே கண்டீர் - அப்பெருமானை யாவன்,
அணி மருதம் - அழகாக நின்றுகொண்டிருந்த இரட்டை மருதமரங்களை
சாய்த்தான் - முறித்துத்தள்ளினவனும்

விளக்க உரை

இந்திரன் எம்பெருமானிடத்தில் எத்தனையுபகாரங்கள் பெற்றான்! எத்தனை பெற்றும் நன்றி நெறியுள்ளவனா அவன்? இடையர்கள் வழக்கமாகத் தனக்கு இடுஞ் சோற்றைக் கண்ணபிரான் விலக்கினன் என்பதுவே காரணமாகப் பசிக்கோபங்கொண்டு மாடுகளையுங் வேணுமென்று மேகங்களையேவிப் பெருமழை பெய்வித்தான், அந்த இந்திரனுடைய தலையை அறுத்தெறிய எத்தனை நிமிஷஞ்செல்லும் கண்ணபிரானுக்கு! எளிதாகத் தலையை அறுத்தெறியலாமாயினும், அவனுணவைக் கொள்ளை கொண்ட நாம் உயிரையுங் கொள்ளை கொள்ளலாகுமோ? என்று பரம கருணை பாராட்டி ‘நம்மவர்களை நாம் ஒழுங்காகப் பாதுகாத்துக் கொள்வோம், கைசலித்தால் தானே ஓய்ந்து நிற்கிறான்‘ என்று திருவுள்ளம் பற்றி இந்திரனை ஒன்றுஞ் செய்திடாது மலையைக் குடையாக வெடுத்து ஆயரையும் ஆநிரைகளையும் காத்தருளின குணத்தை என் சொல்வோம்! மருதமரங்களின் கீழே உரலையுமிழுத்துக்கொண்டு கண்ணனாய்த் தவழ்ந்து சென்றபோது உரல் குறுக்காக இழுக்கப்பட்டதனால் அம்மருத மரங்கள் முறிந்து விழச்செய்தேயும் அதன் கீழிருந்த தனக்கு ஒரு தீங்குமின்றியே அம்மரங்களாய் நின்ற குபேரபுத்திரர்களைச் சாபத்தில் நின்று விடுவித்தும் அம்மரஙகளில் ஆவேசித்துக் கிடந்த அஸுரர்களைக் கொன்றொழித்தும் காட்டின சிறுச்சேவகத்தை என்சொல்வோம்!. கண்ணபிரானாய்த் திருவவதரித்து இப்படிப்பட்ட அருந்தொழில்கள் செய்தவனும் ஸ்ரீராமபிரானாய்த் திருவவதரித்து ராக்ஷஸர்களுடைய குடியிருப்பை யழித்தவனுமான பெருமான் இப்படி தனது நிர்ஹேதுக கிருபையினால் தானே இதர நிரபேக்ஷனாய் வேரோதிகளை வேரறுத்து போல அந்த நிர்ஹேதுக கிருபை கொண்டே நமக்கும் பரமபதமளித்தால் பெறலாகுமெயன்றி. நாமாக ஒரு முயற்சி செய்து பாமபதம் பெறுவது அரிது என்கிறார்.

English Translation

With a mountain he protected the cows, it was he who broke the Marudu trees. If was he who razed the city of Lanka. He will show us the great perfect city of Aydhya.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்