- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கீழ்ப்பாட்டில் யசோதைப் பிராட்டியின் ப்ரஸ்தாவம் வந்ததனால் அவளுக்குக் கண்ணபிரானிடத்திருந்த பரிவின் மிகுதியைப் பேசுகிறாரிதில் யசோதைப்பிராட்டி சற்றுப்போது கண்ணுறங்கிப் போன ஸமயத்திலன்றோ பூதனை வஞ்சிக்க வந்து முலை கொடுத்து மாண்டு பிணமாய் விழுந்தது. உடனே கண்விழித்து நோக்கின யசோதையானவள் அப்பூதனை பெரிய வுடம்போடே பயங்கரமான பிணமாய் நிலத்தில் விழுந்திருப்பதைக்கண்டு ‘இஃது என்ன பேயோ பிசாசோ!‘ என்று அஞ்சிக் காதவழி ஓடவேண்டியிருக்க சிறிதும் அஞ்சாமல் கண்ணபிரா னருகிற் சென்று வாரி எடுத்தணைத்து முலை கொடுத்தாளே! இஃது என்ன பரிவு! என்று ஈடுபடுகிறார். அஞ்சாதே – ஒருத்தி முலைகொடுத்துப் பிணமாய் விழுந்து இன்னும் பத்து நிமிஷ மாகவில்லையே, இந்த நிலைமையில் நாம் முலை கொடுக்கத் துணியலாமோ என்று அஞ்ச வேண்டுவது ப்ராதப்தமாயிருந்தும் பரிவின் கனத்தாலே அஞ்சிற்றிலன் என்க. “நின்னுருகிப் பேய்த்தாய் முலைதந்தாள் பேர்ந்திலளால், பேரமர்க்கண் ஆய்த்தாய் முலைதந்தவாறு“ என்ற பொய்கையார் பாசுரமும் இங்கு அநுஸந்திக்கத் தகும். யசோதைப் பிராட்டி என் அஞ்சவில்லை யென்றால், பிரானுடைய வடிவழகிலே யீடுபட்டதனால் உடனே அணுகி வாரி எடுத்தணைக்க விரும்ப முண்டாயிற்றே அஞ்சி அப்பால் செல்ல மனமுண்டாக வில்லையென்று காட்டுகிறார் சொற்களைச் சொன்னான் போலும்.
English Translation
Yet, she picked him up and gave him sweet suck, not at all afraid that he had killed on ogress. To her he was a only a sweet little dark child with red coral lips and indistinct blabber.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்