விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அடைந்தது அரவுஅணைமேல்*  ஐவர்க்குஆய் அன்று
  மிடைந்தது*  பாரத வெம்போர்,* - உடைந்ததுவும்
  ஆய்ச்சிபால் மத்துக்கே*  அம்மனே, வாள்எயிற்றுப்*
  பேய்ச்சிபால் உண்ட பிரான்   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பேய்ச்சி - பூதனையினுடைய
ஐவர்க்கு ஆய் - பஞ்சபாண்டவர்களுக்காக
உண்ட - உண்டு அவளை முடித்தவனான
பிரான் - ஸ்வாமியானவன்
அடைந்தது - பள்ளிக்கொண்டது

விளக்க உரை

எம்பெருமானுடைய சில சரித்திரங்களை போக்யமாகப் பேசியநுபவிக்கிறார். கிருஷ்ணாவதாரத்துக்கு முன்னே “ஏஷ நாராயண, ஸ்ரீமாந் க்ஷீரார்ணவநிகேதந“ என்கிறபடியே திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்திருந்தான், பிறகு ஸ்ரீகிருஷ்ணனாகத் திருவ்வதரித்துப் பஞ்சபாண்டவர்கட்குப் பக்ஷபாதியாயிருந்து பாரதப்போர் நடத்திவைத்தான், இவ்வளவு அபாரசக்தி வாய்ந்தவனாயிருக்கவும், “உழந்தாள் நறுநெய்யொரோ தடாவுண்ண, இழந்தாளெரிவினா லீர்ந்து எழில்மத்தின், பழந் தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்“ என்கிறபடியே யசோதைப்பிராட்டி மத்துகொண்டு அடிப்பதாகக் கைதூக்க, அசக்தரைப்போலே நடுநடுங்கிக் கிடந்தான், அப்படி அசக்தியை அபிநயிக்கும் பருவத்துக்கு முன்னமே முலையுண்கிற வியாஜத்தாலே பூதனை யென்னும் பேய்ச்சியின் உயிரை உறிஞ்சி முடித்தான். இங்ஙனே சக்தியையும் அசக்தியையும் மாறி மாறி வெளியிடுவது எத்திறம்! என்று உள்குழைந்தவாறு.

English Translation

Can the world understand this wonder? The Lord who reclines in the ocean-deep came as a wonder child and killed on ogress. He conducted the great Bharata war and destroyed mighty kings. And yet he cringed in fear when his mother threatened him with a churning rod for stealing butter!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்