விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நீயும் திருமகளும் நின்றாயால்,*  குன்றுஎடுத்துப்-
  பாயும்*  பனிமறுத்த பண்பாளா,* - வாசல்-
  கடைகழியா உள்புகா*  காமர்பூங் கோவல்*
  இடைகழியே பற்றி இனி.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

குன்று - கோவர்த்தன மலையை
எடுத்து - வேரோடு பிடுங்கி யெடுத்து
பாயும் பனி மறுத்த - மேலேவந்து சொரிகிற மழையை மேலேவிழாமல் தடுத்த
பண்பாளா - குணசாலியே!
காமர் பூ கோவல் - விரும்பத்தக்க அழகிய திருக்கோவலூரில்,

விளக்க உரை

“பாவருந்தமிழாற் பேர்பெறு பனுவற் பாவலர் பாதிநாலிரவின், மூவருநெருக்கி மொழிவிளக்கேற்றி முகுந்தனைத் தொழுதநன்னாடு” என்று புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார்கள் [பொய்கையார், பூதத்தார், பேயார்] மூவரும் ஒருவரை யொருவர் சந்தித்து அந்தாதிபாடினதலம் திருக்கோவலூர் என்பது ப்ரஸித்தம். இவ்வரலாற்றுக்கு மூலமாயிருக்கும் இப்பாட்டு. பிரானே! நானும் மற்றையாழ்வார்க ளிருவரும் ஓடித் திரியும் யோகிகளாய் க்ராமை கராத்ரமாய் ஸஞ்சரித்துப் போருகையில் உனது ஸங்கல்பத்தாலே திருக்கோவலூரில் நெருக்கமானதொரு இடைகழியிலே வந்துசேர, அங்கே நீ திருமகளோடு வந்து புகுந்து நெருங்கினாயே இஃது என்ன திருவருள்! என்று ஈடுபடுகின்றார். திருக்கோவலிடைகழியில் நெருக்குண்ட முதலாழ்வார்கள் மூவரும் ஸ்ரீமந்நாராயணனுடைய நீலமேக ச்யாமலமான திருமேனியையும் காளமேகத்தில் மின்னற்கொடி பரந்தாற்போன்ற திருமகளாரையும் நெஞ்சென்னு முட்கண்ணாலே கண்டு அநுபவித்தபடியை இவ்வாழ்வார் இங்கு வெளியிட்டருளினராயிற்று. [இவ்வரலாற்றின் விரிவு இவரது சரித்திரத்திற் காணத்தக்கது] குன்றெடுத்துப் பாயும்பனிமறுத்த பண்பாளா! = கல்மழை காக்கக் கோவர்த்தனமெடுத்து நின்றவக்காலத்து இடையரிடைச்சிகளோடும் பசுக்கூட்டங்களோடும் நெருக்குண்டு நின்றாற்போலே யன்றோ எம்மோடு நெருக்குண்டிருந்தாயென்ற குறிப்பு. ‘பனி மறைத்த’ என்றும் சிலர் பாடமோதுவர். வடமொழியில் ‘தேஹளீ’ என்னப்பட்டும், உலகவழக்கில் ‘ரேழி’ என்னப்பட்டும் வருகிறஸ்தானமே இடைகழிக்கு வெளியிலே ஸம்ஸாரிகளும், உள்ளே உபாஸகனான ரிஷியுமா யிருக்கையாலே அநந்யப்ரயோஜநரான இவ்வாழ்வார்கள் மூவரும் நின்றவிடமே எம்பெருமான் தான் உவந்து சாருமிடமாகப் பற்றினானென்ப.

English Translation

In the flower groves-surrounded beautiful kovai nagar, -O Benevolent Lord who lifted a mount and stopped the rains!, -You and the lotus dame Lakshmi have come to grace us in the vestibule of a house, neither outside nor inside what a wonder!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்