விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இனியார் புகுவார்*  எழுநரக வாசல்?*
  முனியாது மூரித்தாள் கோமின்,* - கனிசாயக்-
  கன்றுஎறிந்த தோளான்*  கனைகழலே காண்பதற்கு,*
  நன்குஅறிந்த நாவலம்சூழ் நாடு.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கனி சாய - விளாம்பழம் உதிர்ந்து  விழும்படி
கன்று - வத்ஸாஸுரனை
எறிந்த - எறிதடியாக எடுதெறிந்து இரண்டசுரரையும் முடித்த
தோளான் - திருத்தோள்களையுடையவனான ஸர்வேச்வரனுடைய
கனை கழலே - ஆபரணத்வநியையுடைய திருவடிகளை

விளக்க உரை

” பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம், நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கி யாதொன்றுமில்லை” என்ற திருவாய்மொழிப் பாசுரம் இங்கு அநுஸந்திக்கத்தகும். ஈற்றடியில், அறிந்த- அன்சாரியை பெறாத வினைமுற்று; அறிந்தன என்றபடி. நாட்டிலுள்ளவர்கட்கெல்லாம் இனி விரைவில் பகவத் விஷயஜ்ஞாநம் உண்டாகியேவிடும் என்ற நம்பிக்கையினால் எதிர்காலச் செய்தியை இறந்தகாலச் செய்தியாகவே கூறிவிட்டாரென்க. எழுநரகம்- நரகங்கள் பல பல கிடக்கின்றனவே; ஏழுதானோவுள்ளது என்னில்; கொடிய நரக வகைகளைப்பற்றி எழுநரகமென்றது; அவை “ பெருங்களிற்று வட்டம் பெருமணல் வட்டம், எரியின் வட்டம் பூகையின் வட்டம், இருளின் வட்டம் பெருங்கீழ் வட்டம், அரிபடை வட்டமென எழுவகை நரகம்” என ஓரிடத்திலும், “கூட சாலங் கும்பீ பாகம், அள்ளலதோகதி யார்வம்பூ, செந்துவென்றேழுந் தீநரகப்பெயர்” என வேறோரிடத்திலும் இன்னும் வரிவகையாகவும் தமிழ் நூல்களிற் கூறப்பட்டுள்ளன. இனி, ரெளரவம், மஹாரெளரவம், தமச், நித்ருந்தநம், அப்ரதிஷ்டம், அஸிபத்ரம், தப்தகும்பம் என்று கூறுவாரும் வேறுவகையாகக் கூறுவாரு முலர். இனி, “எழுநரகம்” என்ற இத்தொடர்க்கு- எழுகிற நரகம் = சம்ஸாரிக லடங்கலும் சென்று புகுகிற நரகம் என்றும், கிளர்த்தியையுடைய நரகமென்றும் பொருள் கூறுதலுமுண்டு. முனியாது – நரகவாசலில் எப்போதும் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு தாங்கள் கைசலிக்க நலியுமாறு எந்தப்பாவி வரப்போகிறானென்று எதிர்பார்த்தவண்ணமா யிருக்கின்றயமபடர்களை நோக்கி “ மூரித்தாள் கோமின் = கதவுகளைக் கெட்டியாகப் பூட்டிக்கொண்டுஒழிந்து போங்கள்” என்றால் அவர்களுக்குக் கோபம் உண்டாவதற்கு ப்ரஸக்தியுள்ளதனால் ’முனியாது’ என்கிறார். உண்மை யுரைப்பவன்மீது கோபங்கொள்ளலாகா தென்கை. மூரித்தாள் — மிக்க வலிமையுள்ள தாழ்ப்பாள். கோமின் என்ற வினைமுற்றில், கோ- வினைப்பகுதி;- தொடுத்தல்.

English Translation

The wonder Lord who threw a calf and knocked down the fruits has revealed his tinkling lotus feel. This Jambu Dvipa knows him well. No more shall anyone enter the portals of hell. O Messengers of Deathi without getting angry, you had better lock up and leave!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்