விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பிரான்! உன் பெருமை*  பிறர் ஆர்அறிவார்?,*
  உராஅய் உலகுஅளந்த நான்று,* - வராகத்து-
  எயிற்றுஅளவு*  போதாஆறு என்கொலோ,*  எந்தை-
  அடிக்குஅளவு போந்த படி?   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பிரான் - உபகாரகனே!
உலகு - லோகத்தை
உராய் அளந்த நான்று - எங்கும் ஸஞ்சரித்து அளந்தகாலத்தில்
எந்தை - எனது ஸ்வமியான வுன்னுடைய
அடிக்கு - திருவடிகட்கு

விளக்க உரை

எம்பெருமானே ‘நீ பெரிய வடிவுகொண்டு உலகளந்தகாலத்து மிக விசாலமான அத்திருவடிக்குப் பர்யாப்தமாயிருந்த பூமியானது வராஹாவதாரகாலத்தில் எயிற்றின் ஏக தேசத்திலும் அடங்காதிருந்ததென்று புராணம் வல்லார்வாய்க் கேள்விப்படுகின்றோம்; இப்படியிருத்தற்கு ஹேதுவான உனது பெருமை ஸர்வஜ்ஞனான உன்னால்தான் அறியமுடியுமோ முடியாதோவென்று ஸந்தேஹிக்கும்படியா யிராநின்றதேயன்றி உன்பெருமை ஒருவராலு மறியக்கூடியதா யில்லைகாண் என்றாராயிற்று. உன்னால் முயர்வற மதிநலமருளப்பெற்ற என்போல்வார் உன் பெருமையை ஒருகால் கண்டறியக்கூடுமல்லாமல் ஸ்வயத்நத்தாலுணர விரும்புவார்க்கு ஒருநாளும் காணமுடியாதென்று கூறுதலும் உள்ளுறையுமென்ப. இரண்டாமடியில், உராய்-உலாய் [உலாவி] என்றபடி; ரகரலகரங்கட்கு அபேதங்கொள்ளும் மரபினால் இவ்வாறு பொருள் கூறுதல் பொருந்தும். சிறிதும் சிரமமின்றி என்று கருத்து. இது பட்டருடைய நிர்வாஹம். இனி, ‘உரையாய்’ என்னும் முன்னிலையே வலொருமைவினைமுற்று ‘உராய்’ எனத் திரிந்திருப்பதாகக் கொள்ளலாமென்றான் ஒரு தமிழன்; ‘சொல்லு’ என்று ‘பொருளாம்; அது வேண்டா. உராய்- உரோசிக் கொண்டு; எல்லாரோடும் தீண்டிக்கொண்டு என்றுமாம்.

English Translation

The Earth was big enough for you to measure when you straddled it. Then how came it was too small to be held between your tusk teeth when you came as a boar? Lord of all, my Father who can fully comprehend your glory?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்