- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமானே! ஆச்ரிதர்களை ரக்ஷிப்பதும் ஆச்ரித விரோதிகளை சிக்ஷிப்பதுமாகிய இரண்டு காரியங்கள் உனக்கு உண்டு; ஆச்ரிதவிரோதிகளை சிக்ஷிப்பதுதானே ஆச்ரித ரக்ஷணமாகத் தேறுமாதலால் விரோதிகளைத் தொலைப்ப தென்கிற ஒரு காரியமே போதுமாயிருக்கின்றது; அக்காரியஞ் செய்ய உனக்கு முக்கியமான ஸாதநம் திருவாழி; அத்திருவாழியைக் கொண்டே ஆச்ரித விரோதிகளைப் பொடிபடுத்துகின்றாய்; மதுகைடபர் முதலிய துஷ்டவர்க்கங்களைப் பொடிபடுத்தின அவ்வாயுதம் கையிலேயிருக்கவும், ஆநிரையைக் காக்க மலையையெடுப்பதும் நப்பின்னையைக் காக்க விடையேழடர்ப்பதும் முதலியனவாக உடம்புநோவக் காரியஞ்செய்த்து என்னோ? திருவாழியை ஏவினால் இந்திரனது தலை அறுபடுமே; கல்மழை ஓயுமே; ஆயர்களும் ஆநிரைகளும் இனிது வாழ்ந்து போமே; மலையை யெடுத்துப் பரிச்ரமப்பட்டிருக்க வேண்டாவே; இங்ஙனமே, நப்பின்னைப் பிராட்டியை மணம் புணர்வதற்கு விரோதியாயிருந்த எருதுகளின் மேலும் திருவாழியைப் பிரயோகித்திருந்தால் உனக்கொரு சிரமமின்றியே காரியம் இனிது நிறைவேறியிருக்குமே; இப்படி அநாயாஸமாக ஆச்ரித விரோதிகளை நிரஸிக்கும் முகத்தாலேயே ஆச்ரித ரக்ஷணத்தை மிக எளிதாகச் செய்யலாமாயிருக்கவும் நீ உடம்புநோவக் காரியஞ்செய்தது வெறுமனேயோ? ஆச்ரித பாரதந்திரியத்தால் அவர்கள் காரியத்தைச் செய்வதைப் பெறாப்பேறாக நினைப்பதனாலன்றோ? – என்று ஆழ்வார் எம்பெருமானது ஆச்ரித பாரதந்திரியத்திலீடுபட்டுப் பேசினரென்க.
English Translation
The hill became an umbrella, the arm became its stem, when the lord protected the cows. Oh! How he killed seven mighty bulls in the contest! Reclining in the deep ocean wielding his sharp discus on warring Asuras, he is the lord of all.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்