விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆள்அமர் வென்றி*  அடுகளத்துள் அந்நான்று,* 
    வாள்அமர் வேண்டி வரைநட்டு,* - நீள்அரவைச்-
    சுற்றிக் கடைந்தான்*  பெயர்அன்றே,*  தொல் நரகைப்-
    பற்றிக் கடத்தும் படை?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெயர் - திருநாமம் (எப்படிப்பட்ட தென்றால்)
பற்றி - (ஸம்ஸாரிகளை) வாரிப்பிடியாகப் பிடித்துக் கொண்டுபோய்
தொல் நரகை - பழமையாயிருக்கிற (ஸம்ஸாரமென்னும்) நரகத்தை
கடத்தும் - தாண்டுவிக்கின்ற
படை - ஸாதனம்.

விளக்க உரை

ப்ரயோஜநாந்தர பரர்கட்குங்கூடத் தன் திருமேனி நோவக் கடல்கடைந்து அமுதத்தை யெடுத்துக்கொடுத்து அத்தேவர்கட்கு அஸுரஜாதியால் யாதொரு தீங்கும் நேரிடாதபடி ரஷித்தருளு மெம்பெருமானுடைய திருநாமமே ஸம்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் உத்தாரகம் என்கிறார். கடல்கடையுங்காலம் தேவாஸுரர்கள் பரஸ்பரம் பெரிய போர் புரியுங்காலமா யிருந்ததனால் “ஆளமர் வென்றியடுகளத்துள்” எனப்பட்டது; “ஆராத போரி லசுரர்களுந் தானுமாய்க், காரார் வரைநட்டு நாகங்கயிறாகப், பேராமல் தாங்கிக் கடைந்தான்” என்று சிறிய திருமடலிலுமருளிச் செய்யப்பட்டுளது.

English Translation

The wonder lord in the yore went to the battlefield intent on securing victory. He planted a mountain and churned the ocean with a long snake. To cross the long path of hell, chanting his names alone is the means.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்