விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  படைஆரும் வாள்கண்ணார்*  பாரசிநாள்,*  பைம்பூந்-
  தொடையலோடு ஏந்திய தூபம்,* - இடைஇடையில்-
  மீன்மாய*  மாசூணும் வேங்கடமே,*  மேல்ஒருநாள்- 
  மான்மாய*  எய்தான் வரை    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மேல் ஒருநாள் - முன்னொரு காலத்திலே [ஸ்ரீராமாவதாரத்திலே]
மான் - மாரீசனாகிற மாயமான்
மாய - இறந்துவிழும்படி
எய்தான் - அம்பு தொடுத்து விட்ட இராமபிரான் (நித்திய வாஸஞ்செய்கின்ற)
வரை - மலையாவது,

விளக்க உரை

பெண் பிறந்தாரும் அநாயாஸமாக ஆச்ரயிக்கும்படி எம்பெருமான் திருமலையிலே நித்யவாஸம் பண்ணுகிறபடியை அநுஸந்திக்கிறார். திருமலையில் நாள்தோறும் நானாவகையடியவர்கள் வந்து ஆச்ரயியா நிற்க, ‘படையாரும் வாள் கண்ணார்’ என்று ஸ்த்ரீகளை மாத்திரமும் ‘பாரசிநாள்’ என்று த்வாதசீ தினத்தை மாத்திரமும் விசேஷித்து எடுத்துச் சொன்னதன் கருத்து யாதெனில்; அறிவொன்று மில்லாத பெண்களுங்கூட வந்து பணியுமாறு ஸர்வ ஸமாச்ரயணீயனாக இருக்குமிருப்பு விளங்குதற்காகப் படையாரும் வாள் கண்ணர்’ என்றார்; சிற்றஞ் சிறுகாலையில் தானே பாரணை செய்யும்படி விடிவதற்கு முன்னே வைஷ்ணவர் யாவரும் தொழுவதற்கு ஏற்ற நாளாதல் பற்றி ஸத்வோத்தரமான த்வாதசிநாளை யெடுத்தருளிச் செய்தனர். ‘த்வாதசீ’ என்னும் வடசொல் பாரசியெனச் சிதைந்தது. தூபம் - வடசொல். திருவாராதந உபகரணமான தூபத்தின் கமழ்ச்சியே திருமலையெங்கும் பரவிக் கிடக்கின்றதென்பது மூன்றாமடியின் கருத்து.

English Translation

The means to liberation is venkatam, where stars play hide-and-seek with the clouds, Beautiful vel-eyed dames carrying fresh flower garlands and incense wait to offer worship on Dvadasi day, to the Lord who killed the golden deer in the yore, and who resides in the hills.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்