- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இப்பாட்டு ஒரு சமத்காரமான கேள்வியாயிருக்கிறது மஹாப்ரளயத்திலே இந்த விபூதி அழியாதபடி திருவயிற்றிலே இதனை வைத்திகொண்டு அப்ராக்ருதமான உனது திருமேனியைச் சிறுக்கி ஒரு சிறுகுழந்தை வடிவத்தைக் கொண்டவனாகி, சயனிப்பதற்குச் சிறிதும் பற்றாத ஒரு ஆலந்தளிரில் நீ பிரளய காலத்தில் சயனித்தருளினாயென்று பரம ஆப்தர்களான முனிவர் மொழிகின்றனர்; ‘ எத்திறம்!’ என்று நினைந்து நைந்து ஈடுபடும்படியான இச்செயலானது—முன்பு கிருஷ்ணாவதாரத்தில் ஏழுபிராயத்தில் ஏழுநாள் ஒருசேரக் கோவர்த்தந மலையையெடுத்துக் குடையாகப் பிடித்த அருஞ்செயலைக்காட்டிலும் அதிக ஆச்சரியமாயிருக்கின்றது; நீ கண்வளர்ந்த அந்த ஆல் பிரளய ஸமுத்திரத்தில் தோன்றியதோ? அன்றி, பிடிப்பொன்றுமில்லாத ஆகாசத்தில் தோன்றியதோ? அன்றி, பிரளயத்தில் கரைந்துபோன மண்ணிலிருந்துதான் தோன்றியதோ? இதன் வரலாற்றை விளங்கச் சொல்லவேணுமென்று கேட்கிறார். இவ்வதிசயம் ஸர்வஜ்ஞனான வுன்னாலும் கண்டுபிடித்துச்சொல்லமுடியாத தென்றும் அகடிதகடநாஸாமர்த்தியத்தினால் நேரும் அதிமாநுஷ சேஷ்டிதங்களின் குதர்க்கங்கள் பண்ணுவது தகாதென்றும் வெளியிடுதலே இப்பாட்டின் முக்கிய நோக்கமாகும்.
English Translation
In the age bygone, you took the form of a child and swallowed the seven worlds and slept on a floating fig leaf. If what they say is true, then where was the fig tree? In the deluge ocean? Or in the sky? Or an Earth? O Lord who lifted the bowered mountain, pray speak.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்