விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாரி சுருக்கி*  மதக்களிறு ஐந்தினையும்,* 
    சேரி திரியாமல் செந்நிறீஇ,* - கூரிய-
    மெய்ஞ்ஞானத்தால்*  உணர்வார் காண்பரே,*  மேல்ஒருநாள- 
    கைந்நாகம் காத்தான் கழல்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சேரி திரியாமல் செம் நிறீஇ - கண்டவிடங்களிலும் திரியவொட்டாமல் செவ்வையாக நிலைநிறுத்தி
கூரிய - மிகவும் ஸூக்ஷ்மமான
மெய் ஞானத்தால் - உண்மையான பக்தி ரூபா பந்நஜ்ஞானத்தாலே
உணர்வார் - (அவனை) உள்ளபடி உணர வல்லவர்கள்
மேல் ஒரு நாள் - முன்பொரு காலத்திலே

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “ புண்புரிந்த வாகத்தான் தாள்பணிவார் கண்டீர் அமரர்தம் போகத்தால் பூமியாள்வார்” என்றார்; எம்பெருமானது தாள்களைப்பணிதல் யார்க்குக் கைகூடும்? என்று கேள்வியுண்டாக, இந்திரியங்களை அடக்கி ஆள்பவர்களே எம்பெருமான் திருவடியைப் பணிதற்குப் பாங்குடையர் என்கிறாரிதில். இந்திரியங்களை அடக்கியாளுதல் மிகவும் அரிது என்பது தோன்ற, அவ்விந்திரியங்களை மதம்பிடித்த யானையாக உபசரித்துக் கூறுகின்றார். யானைகள் நீர்நிலையில் புகுந்தால் முதலை முதலிய ஜலஜந்துக்களால் துன்பம் நேரிடுவது ஸம்பாவிதமாதலால் அங்குப்போகாதபடி சுருக்கவேணும் யானையை; அப்படியே, பிரகிருதத்தில் நீர்நிலையாவது – விஷயாங்தரங்கள்; இந்திரியங்களாகிற மதயானைகள் சப்தாதி விஷயங்களினருகிற் சென்றால் துன்பம் நேரிடுவது திண்ணமாதலால் அவற்றில் நின்றும் சுருக்கவேணும் இவற்றை; இதுவே “ வாரிசுருக்கி” என்பதன் கருத்து. வாரி என்னும் வடசொல்லுக்கு ‘நீர்’ என்று பொருள்; நீரானது எப்படி விடாயைப் பிறப்பிக்குமோ அப்படி விஷயங்களும் விடாயைப்பிறப்பிக்கின்றன என்பதுபற்றி விஷயங்களை ‘வாரி’ என்ற சொல்லாற் குறித்தன ரென்க. “வாரி சுருக்கி” என்றதே போதுமாயிருக்க, மறுபடியும் “ சேரிதிரியாமல் செந்நிறீஇ” என்றது- பலாத்கரித்தாகிலும் இந்திரிய மதயானைகளை விஷய வீதிகளில் நின்றும் மடக்கியடக்கி ஆளவேண்டுவது அவசியம் என்பதற்காக வென்க. நிறீஇ- சொல்லிசையளபெடை.

English Translation

The celestial elephant in distress was saved by the Lord in the yore. Those who fame their five rutted-elephant-like senses and fix their heart in steadfast contemplation will surely see the Lord's feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்