விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பண்புரிந்த நான்மறையோன்*  சென்னிப் பலிஏற்ற,* 
    வெண்புரிநூல் மார்பன் வினைதீர,* - புண்புரிந்த-
    ஆகத்தான்*  தாள்பணிவார் கண்டீர்,*  அமரர்தம்- 
    போகத்தால் பூமி ஆள்வார். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாள் - திருவடிகளை
பணிவார் - ஆச்ரயிக்குமவர்கள்
அமரர்தம் போகத்தால்  - நித்யஸூரிகளின் போகமாகிய பரமபதாநு பவத்தோடு
பூமி - இந்தலீலா விபூதியை
ஆள்வார் - ஆட்சிபுரிவர்கள்.

விளக்க உரை

பிரமனுக்கு அருள்செய்தமையைக் கீழ்ப்பாட்டிற்சொன்னார், சிவனுக்கு அருள் செய்தமையைச் சொல்லுகிறாரிதில். சிவனுடைய வினையைத் தீற்பதற்காகத் தனது திருமார்பை நகத்தால் கீறி புண்படுத்திக்கொண்டது பற்றி புண்புரிந்த ஆகத்தான் என்றார். இப்படி பரோபகார சீலனான பெருமானுடைய திருவடிகளைப் பணியுமவர்களே உபய விபூதியையும் ஆலவள்ள பாக்யசாலிகள் – என்றாராயிற்று. “வையம்மன்னி வீற்றிருந்து விண்ணுமாள்வார் மண்ணூடே” என்று திருவாய் மொழிப் பாசுரம் இங்கு நினைக்கத்தகும்.

English Translation

The glorious vedic-chanter-Brahma's skull became a begging bowl for Rudra. Out Lord filled with the sap of his heart and freed him of his curse. Know that those who offer worship will rule this world like celestials.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்