விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  திருமகளும் மண்மகளும்*  ஆய்மகளும் சேர்ந்தால்* 
  திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல்,* - திருமகள்மேல்-
  பால்ஓதம் சிந்தப்*  பட நாகணைக் கிடந்த,* 
  மால்ஓத வண்ணர் மனம்? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பால் ஓதம் சிந்த - திருப்பாற்கடலில் சிறு திவலைகளானவை சிதறி விழுந்துஸுகப்படுத்த,
படம் நாக அனை கிடந்த - படமெடுத்த பாம்பினணையிற் பள்ளிகொண்ட
மால் ஓதம் வண்ணர் - பெரிய கடல் போன்ற வடிவை யுடையனான எம்பெருமானது
திரு மகள் மேல் மனம் - பெரிய பிராட்டியார்மேல் (காதல் கொண்ட) திருவுள்ளமானது.
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால் - ஸ்ரீதேவி பூதேவி நீளா தேவி மூவரோடும் கலந்து பரிமாறும் போது

விளக்க உரை

நாம் மலைபோன்ற குற்றங்களைச் செய்தாலும் எம்பெருமான் அவற்றைக் குணமாகத்திருவுள்ளம் பற்றுவன் என்றார் கீழ்ப்பாட்டில். அப்படி குற்றத்தையும் குணமாகத் திருவுள்ளம் பற்றவேண்டிய காரணம் ஏதென்ன, பிராட்டிமார் மூவரும் கூடவே குடியிருக்கை தான் காரணமென்கிறாரிதில். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்னும் மூன்று பிராட்டிமார்களும் கூடியிருக்கும்படியை முதலடியிலருளிச்செய்கிறார். பாலோதம் சிந்தப் படநாகணைக்கிடந்த மாலோதவண்ணரது திருமகள் மேல் (வைத்து) மனமானது திருமகட்கே தீர்ந்தவாறு ஏன்கொல்? என்கிறார். இப்பாட்டுக்கு இரண்டு படியான நிர்வாஹங்களுண்டு; தீர்ந்தவாறென்கொல் என்பதை நாச்சிமார் மூவரிடத்திலும் கூட்டி, திருமகட்கே தீர்ந்தவாறென்கொல், மண் மகட்கே தீர்ந்தவாறென்கொல், ஆய் மகட்கே தீர்ந்தவாறென்கொல் என்று திருமலை அனந்தாழ்வான் நிர்வஹிப்பராம். இங்ஙனன்றிக்கே பட்டருடைய நிர்வாஹம் – திருமகட்கே தீர்ந்தவாறென்கொல்? = திருமகளோடு கலந்து பரிமாறும்போது மண்மகள் முதலிய மற்ற பிராட்டிமார்கள் போகத்திற்கு உபகரணமாயிருப்பர்கள்; திருமகளோடு ஸம்ச்லேஷிப்பதைத் தங்கற் முலையோடும் தோளோடும் ஸம்ச்லேஷிப்பது போலவே நினைத்திருப்பர்கள். ஆகையாலே மற்ற தேவிமார்களை உபகரண கோடியிலேயாக்கித் திருமகள் பக்கலிலேயே பிரதான போகம் கொள்வது என்கொல்? – என்று. தீர்ந்தவாறு – தீருகையாவது – ஒரு வஸ்துவைவிட்டு மற்றொரு வஸ்துவில் சிறிதும் நெஞ்சு செல்லாமல் அந்த ஒரு வஸ்துவிலேயே ஆழங்காற்பட்டிருக்கை. 1. “ தாமரைக்கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்” என்ற திருவாய்மொழிப் பிரயோகமுங் காண்க.

English Translation

Sri, Bhu and Nila attend on him in the ocean which sprays milk, while the adorable ocean-hued Lord, reclines on a hooded serpent. His heart is forever given to the lotus-dame Lakshmi How so? She knows at heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்