விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மனமாசு தீரும்*  அருவினையும் சாரா,* 
  தனம்ஆய தானேகை கூடும்,* - புனம்மேய-
  பூந்துழாயான் அடிக்கே*  போதொடு நீர்ஏந்தி,* 
  தம்தொழா நிற்பார் தமர். 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தொழா நிற்பார் தமர் தாம் - வணங்குமவர்களான பாகவதர்களுக்கு
மனம் மாசு தீரும் - மனக்குற்றங்கள் விட்டு நீங்கும்
அருவினையும் சாரா - (ஸ்வப்ரயத்நத்தால்) நீக்க முடியாத தீவினைகளும் அணுகமாட்டா:
தனம் ஆய - (பக்திமான்களுக்கு செல்வமாகிய பரமபக்தி முதலியவைகளும்
தானே கைகூடும்) - தனக்குத்தானே வந்து கைபுகுரும்

விளக்க உரை

கீழ்ப்பாசுரத்திலருளிச்செய்தபடி பிராட்டிமார்கள் இடைவிடாது கூடியிருக்கையாலே ஒருவரும் தங்கள் குற்றங்களை நினைத்துப் பின்வாங்க வேண்டுவதில்லை; ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த கிஞ்சித்காரங்களிலே அந்வயிக்கலாம் ; அப்படி அந்வயிக்கவே தீமைகளெல்லாம் தொலைந்து நன்மைகள் கைகூடுமென்கிறார். ஸர்வரக்ஷகன் என்பது விளங்கத் தனிமாலையிட்டிருக்கிற எம்பெருமானுடைய திருவடிகளில் திருவாராதன உபகரணங்களான புஷ்பம் தீர்த்தம் முதலியவற்றை யேந்திக்கொண்டு வந்து பணிமாறி வழிபடுமவர்களுக்கு – மநஸ்ஸைப் பற்றிக்கிடக்கிய அஜ்ஞாநம் விஷயராகம் முதலான தோஷங்களடங்கலும் தன்னடையே விட்டுக்கழலும்; இவற்றுக்கு மூலகாரணமான துஷ்கருமங்களும் கிட்டவராதபடி தொலைந்து போம்; ஸ்வரூபாநுரூபமான செல்வமாகிய பரமபக்தி முதலியவைகளும் தனக்குத்தானே வந்து கைபுகுரும் என்றாராயிற்று.

English Translation

The heart will be freed of dross, all past karmas will vanish, wealth will come of its own accord, -when the Lord of fresh Tulasi garland is worshipped with flowers and fresh water. Such is his grace on devotees.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்