விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குன்றுஅனைய குற்றம் செயினும்*  குணம்கொள்ளும்* 
    இன்று முதலாக என்நெஞ்சே,* - என்றும்-
    புறன்உரையே ஆயினும்*  பொன்ஆழிக் கையான்* 
    திறன்உரையே சிந்தித் திரு

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் நெஞ்சே - எனது மனமே!
என்றும் - எப்போதும்
புறன் உரையே ஆயினும் - (உள்ளூர இல்லாமல் மேலுக்குச் சொல்லுகிற வார்த்தையாயிருந்தாலும்
பொன் ஆழி கையான் திறன் உரையே - சக்ரபாணியான எம்பெருமான் விஷயமாகப் பேசும் பேச்சையே
சிந்தித்து இரு - அநுஸந்தித்துக் கொண்டிரு;

விளக்க உரை

எம்பெருமானுடைய வாத்ஸல்யகுணத்திலீடுபட்டுப் பேசுகிறார்; நெஞ்சே!, ஆந்தரிகமான அன்பின் மிகுதியினாலே சொற்களைத்தொடுத்து எம்பெருமானைத் துதிப்பார் பலருண்டு; அப்படிப்பட்ட அன்பு நமக்கு இல்லாமையினால் கழுத்துக்கு மேற்படவே சில சொற்களை நாம் கபடமாகச் சொல்லவல்லோம்; அப்படி மேலுக்குச்சொல்லுகிற வார்த்தையாயிருந்தாலும் அது பகவானைப்பற்றின வார்த்தையாக இருந்துவிடுமாயின் பயன்படும். எம்பெருமான் ‘மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந’ [ ப்ரீதியை பாவனைசெய்து வருபவனையும் கைவிடமாட்டேன் ] என்று சொன்னவனாகையாலே நாம் மேலுக்குச்சொல்லுகிற வார்த்தையையும் அவன் கனத்ததாகத் திருவுள்ளம்பற்றித் தன்னுடைய வாத்ஸல்ய குணத்தை நம்மேல் ஏறிப்பாயவிடுவன்; நாம் மலைமலையாகக் குற்றங்கள் செய்தாலும் 1. “ என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்” என்னுமவனுடைய திருவுள்ளத்தில் அவையெல்லாம் நற்றமாகவே படும்; அவன் நமது ஆபிமுக்யத்தை மாத்திரமே எதிர்பார்ப்பவனாதலால் நாம் மேலுக்குச் சொல்லும் வார்த்தையும் அவனுக்குக் கார்யோபயோகியாக ஆய்விடுங்காண் – என்றாராயிற்று.

English Translation

Mountain-like faults will be ignored, only your good deeds will be taken into account, O Heart of mine! From this day onwards and forever, always contemplate and prate, -even if it were mere lip-service, -the glories of the discus wielder, the lord of Sri.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்